அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)
கருப்பு தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?
கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa) என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
என்ன என்ன சத்துக்கள் நிறைந்து கருப்பு தினை அல்லது கீன்வாவில் (black-quinoa health benefits) ?
தானியங்களில் நன்மைகளை அளிக்க கூடிய பலவகைகள் இருந்தாலும் கருப்பு கீன்வா(கருப்பு தினை)வின் பயன்கள் மிக அற்புதம். ஏனெனில் இதில் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய மிக அதிக விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
அது மட்டும் அல்லாமல் கருப்பு தினையில் (black-quinoa health benefits) அதிக அளவு புரோட்டீன், நார்ச்சத்து , 10 அமினோ அமிலங்களின் கூட்டம் நிறைந்துள்ளது. சைவ பிரியர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நமது உடலுக்கு கூடுதல் பயன் அளிக்கும் நார்ச்சத்தும் சேர்ந்து இருப்பது சிறப்பு அம்சம்.
இந்த கீன்வாவில் புரோட்டீன், இரும்புச் சத்து, விட்டமின்கள் பி, ஆந்தோசயனின், காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன.
கருப்பு தினை அல்லது கீன்வாவில் என்ன என்ன மருத்துவ குணங்கள் உள்ளன? (black-quinoa health benefits)
- கருப்பு கீன்வா (கருப்பு தினை) போன்ற முழு தானியங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வாக கீன்வா போன்ற முழு தானியங்களை அளவோடு சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைகளில் இருந்து உடலைப் பாதுகாத்து கொள்ளலாம். இந்த தானியத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் வைட்டமின்-இ, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.
- கிருமித் தொற்று கீன்வாவை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக கழுவி விட்டு சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதன் மூலம் கிருமித் தொற்று வர நிறையவே வாய்ப்புள்ளது.
- சீரண பிரச்சனைகள் சில நபர்கள் கீன்வாவை எடுத்துக் கொள்ளும் போது சீரண பிரச்சனைகளை சந்திக்கின்றனர். காரணம் இதிலுள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகரிக்கிறது.
- இரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்து அதிகரிப்பதன் மூலம் உங்கள் தோலுக்கு நன்மை பயக்கும்
- ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கருப்பு கீன்வாவில் ஆந்தோசயனின் அதிகளவில் காணப்படுகிறது. இந்த ஆந்தோசயனின் சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்தும், புற்றுநோய் செல்களையும் தடுக்கிறது நாள்பட்ட பிரச்சினைகள், இதய நோய்களை தடுக்கிறது
- கீன்வாவில் விட்டமின் பி, போலேட் போன்றவை ஆரோக்கியமான நரம்பு மண்டலம் கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது. அதே மாதிரி கண்களின் ஆரோக்கியத்திற்கு, கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும் இதில் காப்பர், மாங்கனீஸ் மற்றும் ஆல்பா லினோலெனிக் அமிலம் போன்றவை அழற்சியை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
அரிசியை விட சிறந்த உணவு கருப்பு கீன்வா(black-quinoa health benefits):-
மற்ற தானியங்களில் உள்ளது போல் இதிலும் குறைவான அளவிலேயே மாவுச்சத்து இருக்கிறது. அரிசியைவிட இதில் புரதச்சத்து அதிகம். இந்த தானியம் தாவர புரதம் மற்றும் முழுமையான புரத உணவு. முட்டையில் காணப்படுகிற அனைத்து அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கீன்வா மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.இருதய நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற கருப்பு கீன்வா(black-quinoa) :
இதயக் கோளாறு கொண்ட மக்களுக்கு quinoa ஐ பரிந்துரைக்கின்றன, ஏனெனில் இது கொழுப்பு அளவுகளை அதிகரிக்காது. இது உங்கள் இதயத்திற்கு சேதத்தை மேலும் குறைக்கக் கூடிய கொழுப்பை குறைக்கலாம்.உடல் எடையை குறைக்க உதவும் கீன்வா(black-quinoa help to Weight Loss):-
இந்த தானியத்தில் Soluble, In-soluble(எளிதில் கரைதல் மற்றும் கரைவதற்கு கடினமானது) நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை சரி செய்து, கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை, உடல் எடை ஆகியன அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். இது முழு தானியம் என்பதாலே கொஞ்சம் சாப்பிட்டாலே நிறைவு கிடைக்கும்.இரும்புச் சத்து அதிகம் கொண்ட கருப்பு தினை:- (black-quinoa health benefits):-
நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்ல இரும்புச் சத்து தான் உதவுகிறது. இரும்புச் சத்து குறைவாக இருந்தால் உடல் பலவீனம், சோர்வு மற்றும் அனிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு கப் கருப்பு கீன்வாவில் சுமார் 15% இரும்புச் சத்து அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அளவுடன் உண்டு வளமுடன் வாழ உதவும் கருப்பு தினை((black-quinoa):-
இத்தனை சிறப்புகள் கொண்டது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. உதாரணத்துக்கு, நீரிழிவு நோயாளிக்கு எவ்வளவு மாவுச்சத்து தேவை என ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறாரோ அந்த அளவுக்குத்தான் கீன்வா சாப்பிடலாம். எந்த தானியத்தை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், அது சரிவிகித உணவில் ஒரு பங்காக மட்டுமே இருக்க வேண்டும்.முடிவுரை:-
நமக்கு நோய் வந்தபின் அவதிப்படுவதை விட வரும் முன் காப்பது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்து நமது உடல் நலத்தை பாதுகாக்கும் இது போன்ற உணவு வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்…
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”… என்பதை உணர்ந்து வாழ்வோம்!!!இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும்,வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த்டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
அருமையான பகிர்வு. இங்கே சொத்தை பல் இயற்கை வைத்தியம் பற்றிய பதிவு உள்ளது. படித்துப் பயன்பெறவும்.
ReplyDelete