வணக்கம் நண்பர்களே!
- எனது பெயர் விநாயகம், நான் தற்போது சுய தொழில் செய்து வருகிறேன், என் சொந்த இடம் கோவில் மாநகரமான மதுரை.
- பாசத்திர்க்கும் சரி, வீரத்திற்கும் சரி விட்டுக்கொடுக்காத நெஞ்சங்கள் கொண்ட இவ்வூரில் வாழ்வதில் எனக்கு எப்போதுமே மட்டற்ற மகிழ்ச்சி தான்.
- பொதுவாகவே என்னுடைய மன எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய விருப்பம். அதை நாகரீகமான முறையில் செய்து கொண்டு இருக்கிறேன் என நம்புகிறேன்.
- எனது பள்ளி படிப்பு முழுவதும் தமிழ் வழியில் என்பதாலோ என்னவோ இயல்பாகவே எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்.
- இன்றைய காலத்தில் நமது உணவு முறை மாற்றம் மற்றும் துரித உணவு அதாவது Fast Food சாப்பிடுவதன் விளைவாக பல உடல் நலக் குறைவுகள், போதுமான ஊட்டச்சத்து இல்லாமை, உடல் சோர்வு மற்றும் பல வித நோய்களுக்கும் இது கரணம் ஆகிறது.
- இவற்றை தவிர்த்து நமது பாரம்பரிய உணவு முறை மற்றும் இயற்கையாக விளையும் பழத்தில் என்ன என்ன மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உள்ளது என அனைவரும் தெரிந்து கொள்ளவும் நான் இந்த TamilHealthTips360 உருவாக்கி இருக்கிறேன்.
- நமக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் எழுத நான் வந்து இருந்தாலும், எழுத்து எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்து இருக்கிறது. நான் எழுதத் தொடங்கிய பிறகு பெற்ற அனுபவங்கள் ஏராளம்.
- எனக்கு அனைத்துப் பிரிவுகளிலும் ஆர்வம் என்பதால் ஜனரஞ்சகமாக இப்பொழுதும் எழுதி வருகிறேன். தொழில்நுட்பம் குறித்து எழுதுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
- ஆனால் தற்போது என் பொழுதுபோக்கு மூலிகை மற்றும் பழங்கள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி எழுதி கொண்டு இருக்கிறேன்.
- உலகம் என்னும் ஒட்டு மொத்த மாளிகைக்கும் பூஜை அறையாக இருப்பது நமது இந்திய தேசம் தான். இங்கு தான் ஒவ்வரு இயற்கை மூலிகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் பற்றி நன்கு தெரிந்து இருந்தோம். ஆனால் காலப்போக்கில் அவை மறைந்து விட்ட காரணத்தால் அதனை மீட்டு பலருக்கும் நமது முன்னோர்கள் கூறிய ஒவ்வரு இயற்கை மூலிகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் பற்றி எடுத்து உரைக்க உருவாக்கப் பட்டதே இந்த வலைத்தளம்.
- எனக்கு ஆதரவு தெரிவிக்க மறக்காமல் எனது வலைதளத்திற்கு வந்து நீங்கள் பயன் பெற வேண்டும்.
இந்த வலைப்பதிவில் நாம் தினசரி உண்ணும் சாதாரண பழங்கள், காய்கறிகள் கீரைகள் மற்றும் மூலிகைகள் உங்கள் உடல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளை எழுதி வருகிறேன்.
உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.
மின்அஞ்சல் முகவரி: tamilhealthtips360@gmail.com
நன்றி!!!என்றும் அன்பு உள்ளத்துடன் உங்கள்
விநாயகம்.
Comments
Post a Comment