அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

சியா விதைகளின் அற்புத மருத்துவ குணங்கள்(Top Health Benefits of Chia Seeds)

சியா விதைகளின் அற்புத மருத்துவ குணங்கள்(

Chia Seeds Health Tips in Tamil)
:-

சியா விதைகள்(chia seeds in tamil) பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. அதிலும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும்.

நமது பூமியில் விளையக்கூடிய விதைகளிலே மிகவும் ஆரோக்கியம் அதிகம் கொண்டது  இந்த சியா விதையாகும்(Chia Seeds Health Tips in Tamil).

இந்த சியா விதையில் அளவற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக இதில் மெக்னிசியம், கால்சியம், புரதம் போன்ற அனைத்து விதமான சத்துக்களும் உள்ளன. எனவே இந்த சியா விதையை நம் உணவில் எடுத்து கொண்டு அதன் நன்மைகள் பெறுவது மிக அவசியம். இந்த பதிவில் சியா விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம்:-

இந்த நாம் அனைவருமே இயற்கையோடு இணைந்துள்ளோம். எனவே நமக்கு இயற்கை மருத்துவம் தான் சிறந்தது. நாம் மேற்கொள்ளும் உணவு முறையில் தான் நமக்கு தேவையான சத்துக்களை நாம் பெற முடியும்.எனவே சரியான முறையில் உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்(chia seeds in tamil).

கால்சியம் சத்து அதிகம் கொண்ட சியா விதை(Chia Seeds Health Tips in Tamil) :-

வயதானவர்களுக்கு அடிக்கடி உடலில் ஏற்படும் மூட்டுவலி, இரும்புசத்து குறைபாட்டிற்கு அவர்களின் உடலில் கால்சியம் அளவு குறைவாக இருப்பதே காரணம். நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும் அத்தகைய கால்சியத்தின் அளவு பாலில் அதிகமாக உள்ளது என்று. ஆனால் பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவை விட சுமார் 6 மடங்கு மிக அதிகமாக நமது சியா விதையில் உள்ளது(chia seeds in tamil).  அது மட்டும் அல்லாமல் இதில் அதிக அளவு இரும்பு சத்து(Iron) உள்ளது. இது  நமது எலும்புகளுக்கு மிகவும் ஏற்றது. நாம் தினசரி உண்ணும் கீரையில் இருக்கும் இரும்பு சத்துக்களை விட சுமார் 3 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் உள்ளது என்றால் பாருங்கள். இவ்வளவு அளப்பெரிய சத்துக்களை கொண்ட சியா விதைகளை கண்டிப்பாக தவறாமல் உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த பதிவு.

உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும் சியா விதைகள் (ஒமேகா-3):-

நம்முடைய உடலுக்கு ஒமேகா-3 மிகவும் முக்கியமாகும். அத்தகைய ஒமேகா-3 அதிகமாக சால்மீனில் தான் இருக்கும் என நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் இந்த சால் மீனில் உள்ள ஒமேகா-3 அளவை விட சியா விதையில் 8 மடங்கு ஒமேகா-3 சத்து உள்ளது. எனவே இந்த விதையை உணவில் சேர்த்து கொண்டு ஆற்றலை பெற வேண்டும்.


சரும பிரச்சனைகள்(Health Tips Chia Seeds):-

இன்றையகாலத்தில் செயற்கை சாயங்கள் மூலமாக தங்கள் அழகை மேம்படுத்த செலவுகள் செய்யும் பலரும் ஒரு முறை  இந்த சியா விதைகளை கொண்டு தயாரிக்கும் முகப்பூச்சை  பயன்படுத்தி பாருங்கள் அதனால் என்ன பயன் என்றால் சருமத்தில் உள்ள அனைத்து இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு நல்ல  முகப் பொலிவை தருகிறது. எனவே சியா விதைகளை கொண்டு நம்முடைய முகத்தின் அழகை மேலும் மேம்படுத்தலாம்.
செய்முறை:-
இரண்டு டீஸ்பூன் சியா விதைகள் எடுத்து கொள்ளவும், அதனுடன் அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். அதன் பின்  முகத்தில் அதனை அப்பலே செய்து  சிறிது நேரம் கழித்து நன்கு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய முகம் நல்ல பளபளப்பும், பொலிவை தரும்.

பீன்ஸை விட சிறந்த சியா விதை (கூந்தலுக்கு நல்லது):-

இந்த சியா விதையில் அதிக அளவு  கெராட்டினும், புரதமும் உள்ளது.  பீன்ஸை விட சியா விதையில் சுமார் 20 மடங்கு புரதம் இதில் அதிகம் உள்ளது. இதில் உள்ள கெராட்டின் சத்து  கூந்தலை அடர்த்தியாகவும்ம், நீளமாகவும் வளர உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவும் சியா விதைகள்(Chia Seeds Health Tips in Tamil) :-

நவீன காலத்தில் உடல் உழைப்பின்றி பல நமது அன்றாட வேலைகளை செய்து முடித்து விடுவதால் உடல் பருமனும் அதிகரிக்கிறது.  இதன் விளைவு நாம்  அனைவருக்குமே நமது உடல் எடையை சரியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைக்க நவீன முறையில் பல முயற்சிகளை எடுத்து தோத்து போகி இருப்பார்கள். அவர்களுக்கு சியா விதை ஒரு நல்ல நிவாரணமாகவும், பலனாகவும்  இருக்கும்.சியா விதையில் கொழுப்பை குறைக்கும் அதிகம் சக்தி உள்ளது(chia seeds in tamil). இதனால் உடல் பருமனை கட்டுப்படுத்தி நம்மை நல்ல ஆரோக்கியமாக வைத்து கொள்ள சியா விதைகள் உதவுகின்றன.

சியா விதையில் மேலும் உள்ள பல சத்துக்கள்:-

இதில் அதிக அளவு மெக்னிசியம் உள்ளதால் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
ப்ளாக்ஸை விட 2 மடங்கு நார்ச்சத்து உள்ளது. இதனால் நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கிறது.
அவலையில் உள்ள செலினியத்தை விட 4 மடங்குக்கு செலினியம் உள்ளதால் நமக்கு தேவையான சத்துக்களை பெறலாம்.
அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் நம்முடைய பசியின்மை பிரச்னையை தீர்த்து வைக்கும் சக்தி உள்ளது.


முடிவுரை:- 

நமக்கு நோய் வந்தபின் அவதிப்படுவதை விட வரும் முன் காப்பது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்து நமது உடல் நலத்தை பாதுகாக்கும் இது போன்ற உணவு வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து வாழ்வோம்!!!
இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.

குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள்கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும்,வருமுன் காக்கவும்இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமேஇதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த்டிப்ஸ் 360பொறுப்பாகாது.

Comments

  1. உங்கள் பிளாக் மிகவும் அருமையாக உள்ளது ஒவ்வொரு வரியையும் நமது உடல்நலத்திற்கு தேவையான விஷயங்களை மிக அற்புதமாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். இதை என் நண்பர்களுக்கும் நான் பரிந்துரைப்பேன்!உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்! விநாயகம்!

    ReplyDelete

Post a Comment