பேரீச்சம் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. முக்கியமாக இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது.
குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு பேரிச்சம்பழம்.
இரத்தத்தை சுத்தப்படுத்தவும், விருத்தி செய்யவும் பேரீச்சம் பழம் முக்கிய பங்காற்றுகிறது.
என்ன என்ன சத்துக்கள் உள்ளது?
பேரிச்சம் பழத்தில் உடல் வலிமையை அதிகரிக்கும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன.
மேலும் க்ளுகோஸ், ஃபிரக்டோஸ், சக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
கண் குறைபாட்டை சரி செய்ய?
பேரீச்சம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் A உள்ளதால் கண்பார்வை குறைவை சரி செய்ய சிறந்த அருமருந்தாக உள்ளது.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்க?
பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.
நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும், அதனை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் பேரீச்சம்பழம் உதவும்.
அடிக்கடி ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் சரி செய்ய பேரீச்சம்பழம் உதவுகிறது.
வயிற்றுப்போக்குக்கு சிறந்த மருந்து?
பேரீச்சம்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, மேலும் கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.
பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, கை, கால் தளர்ச்சி குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு?
பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு கால்சியம் சத்தும், இரும்புச்சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை சீர் செய்யவும் பேரீச்சம்பழம் உதவுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.
பெண்களுக்கு மெனோபாஸ் பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதிற்குள் உள்ள காலகட்டத்தில் அவர்களின் மாதவிலக்கு முற்றிலும் முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, நாம் தினமும் பேரீச்சப்பழத்தை பாலில் கலந்து பின்பு கொதிக்க வைத்து தற்போது பாலும், பேரீச்சை பலமும் நன்கு சேர்ந்து இருக்கும் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்போதும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு, பாலையும் பருகி வந்தால் சளி இருமலுக்கு நல்ல மருந்தாகும்.
இன்றைய காலத்தில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் அவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். பொதுவாக நீரழிவு(சக்கரை) வியாதி உள்ளவர்களுக்கு கால்சியம் மற்றும் இரும்பு சத்து அவசியம். இதனால் தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சை பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் கிடைக்கும்.
ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைத்தன்மை குறைபாடு பிரச்சனைகளுக்கு தீர்வு?
குழந்தைப் பேறுக்கு முக்கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் பேரீச்சம்பழமும், தேனும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும். இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
முதியோருக்கு உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும். புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும். பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் வராது.
முடிவுரை!
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியமும், நல்ல பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான பேரீச்சம் பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். மேலும் அடுத்த பதிவில் இதே போன்ற சத்துமிக்க அதிக மருத்துவ குணங்கள் கொண்ட பழத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம். இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல் தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே.
Comments
Post a Comment