மாம்பழங்களில் அடங்கியுள்ள வைட்டமின் சத்துக்கள் வருமாறு:-
மாம்பழங்களில் வைட்டமின்கள் "C" மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அவை கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு துணைபுரியும். வைட்டமின் "A" மாம்பழத்தில் அதிகம் இருக்கிறது. கண்கள் வறட்சி அடைவதை தடுக்கும். பார்வை திறனை மேம்படுத்தவும் உதவும்.
பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது நமது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.
கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழத்தை தவிர்க்கவும்!
கற்கள் வைத்துப் பழுக்கவைக்கும் மாம்பழங்களையும் மிக எளிதாக கண்டறியலாம். இயற்கையாகப் பழுத்த பழங்களில் தோல் சற்று சுருங்கி கொழ கொழ வென இருக்கும். செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழம் கடினமானதாகவும், பல பல வென மின்னும். ஆகவே மாம்பழத்தை பார்த்து தெளிவாக வாங்க வேண்டும்.
மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் என்பது குறிப்படத்தக்கது.
மருத்துவப்பயன்கள் என்ன என்ன?
- மாம்பழத்தில் நிறைந்திருக்கும் நார்சத்துக்கள் செரிமானத்தை எளிமைப்படுத்தி ஜீரணத்தைக் கூட்டும் சக்தி கொண்டது.
- மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
- மாம்பழங்களில் காணப்படும் பீட்டா கரோட்டின் ஆஸ்துமா தோன்றுவதை தவிர்க்க வகை செய்யும். முகப்பருக்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
- மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி தண்ணீர் கலந்து ஜூசாக தயாரித்து பருகினால் உடல் குளிர்ச்சியடையும். இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாத உணவுகளின் பட்டியலில் மாம்பழங்கள் உள்ளன. ஆதலால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
- தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும் கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.
- மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கின்றன. மாம்பழங்களில் இரும்பு சத்தும் உள்ளது. மாதவிலக்கு நிற்கும் 50 வயது பெண்களும், கர்ப்பிணிகளும் மாம்பழங்களை சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
- மாம்பழங்களில் உள்ள ஒருவகை நுட்பமான சத்துக்கள் புற்றுநோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகின்றன
- மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.இவை இருதய நோய்,விரைவில் முதுமை அடைவது போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.
- மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது.ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.
- வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ,மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
- அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை.வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு,சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.
- மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தும்.
- ஒரு சிலரது உடல் மிகவும் நோஞ்சானாக காணப்படும்.இத்தகையவர்களுக்கு மாம்பழம் கொடுக்க, வேறு எந்த உணவும் செய்யாத மாய வித்தையை மாம்பழம் செய்து, அவர்களை கொழு கொழு உடலோடு புஷ்டியாக ஆக்கிவிடும்.ஏனெனில் இதில் ஏராளமான கலோரிகள் மற்றும் ஹார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன.
- அத்துடன் சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தை கூட மாம்பழம் தடுத்துவிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு.
- ரத்த சோகை, ஈறுகளில் ரத்தம் வடிதல், இருமல், காய்ச்சல், குமட்டல் மற்றும் கடல் ஒவ்வாமை நோய் போன்றவற்றிற்கு மாம்பழம் நல்ல மருந்தாக இருக்கும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும். பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
- கண்ணில் மாலைக்கண், நீர் வடிதல் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
- மாணவர்களுக்கு சிப்ஸ், மிக்சர் தேவையில்லை?
- தேர்வு காலங்களில் படிக்கும் குழந்தைகள், தூக்கம் வராமல் இருப்பதற்காக சிப்ஸ், மிக்சர் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை கொறிப்பார்கள். அவர்கள் இத்தகைய உணவுகளுக்குப் பதிலாக மாம்பழத் துண்டுகளை சாப்பிட அதிலிருக்கும் குளுடாமின் அமிலம்,கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.
- ஜாலவித்தையை புரியும் மாம்பழம்!
- மிக முக்கியமான சமாச்சாரமும் மாம்பழத்தில் அடங்கியுள்ளது. அது செக்ஸ் ஹார்மோன்களை சீராக வைத்து, ஒருவரது பாலுணர்வை தூண்டும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது என்பதுதான் அது. இதில் உள்ள வைட்டமின் 'ஈ' சத்துதான் இந்த ஜாலவித்தையை புரிகிறதாம்.
- மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம், மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.
முடிவுரை!
மேற்கண்ட மருத்துவ பயன்களுக்கு மட்டும் மாம்பழத்தை சாப்பிடாமல் அதன் சுவைக்காக அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.ஏனெனில் மாம்பழம் எல்லா நேரமும் கிடைப்பதில்லை. மாம்பழம் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் கிடைக்கும்போது சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அது கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்காத மாம்பழம் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்!நண்பர்களே!
தினமும் நல்ல பயனுள்ள மருத்துவ உணவுகளை சாப்பிட்டு நாளும் நலம் பெற தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360-ன் வாழ்த்துக்கள்!
குறிப்பு:இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
Comments
Post a Comment