கொய்யா பழத்தில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன?
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான முக்கிய பழம் கொய்யாப் பழம்.
கொய்யாப்பழத்தில் விட்டமின் A, B, C, புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், மற்றும் இரும்புச்சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொய்யா பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால், நிறைய மருத்துவ நன்மைகளை நாம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொய்யா பழத்தில் என்ன என்ன நன்மைகள் நிறைந்துள்ளது?
கொய்யா பழம் நம் உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அற்புத பழம் தான் நமது கொய்யா.
கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
கொய்யாமரத்தின் மேல் உள்ள பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் குணப்படுத்தும். வேரரில் உள்ள பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.
தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால், அதன் மூலம் நம் உடலின் தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
முக்கியமாக கொய்யா பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.
கொய்யா பழம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் ஒரு அரு மருந்தாக பயன்படுகிறது.
கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் மிக்கது, மேலும் மலச்சிக்கல் போக்கும். கொய்யா இலை கசாயம் வாந்தியினை தடுக்கும்.
விட்டமின் C சத்துக்களை, கொய்யா பழம் அதிகமாக கொண்டுள்ளதால், விட்டமின் C மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் இந்த கொய்யா பழம் வர பிரசாதம், வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. இந்த கொய்யா பழத்தினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கொய்யா பழத்தில் உள்ள விட்டமின் A, சளித்தொல்லை மற்றும் குடல் தொடர்புடைய குறைகளை சரிசெய்து, பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.
கொய்யா பழம் சாப்பிடுவதால், அது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து, பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு சரியான தீர்வு தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கொய்யா பழத்தில் என்ன என்ன மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது?
Lycopene எனும் சத்துக்கள் நம் உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
கொய்யாப்பழத்தை சாப்பிடும் போது, வெட்டிச் சாப்பிடுவதை விட கடித்துச் சாப்பிடுவதால், அதனுடைய முழுமையான பலனை பெறலாம்.
கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
அநேக நபர்கள் கொய்யாப் பழத்தை கத்தி அல்லது அருகமனையால் அறிந்து அதன் தோலை சீவி சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு நமது பற்களில் நன்றாக மென்று தின்பதே நம் பற்களுக்கு நல்ல வலிமையை தரும். இதனால் நமது பற்களும், ஈறுகளும் நன்கு பலப்படும்.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் ஒரு வகையான கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான பல நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கடுமையாக கட்டுப்படுத்தும்.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் குடல் அல்சர் மற்றும் பல் வலிக்கும் நல்ல தீர்வாக உள்ளன.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
கொய்யா பழம் முகத்திற்கு பொலிவையும், அழகையும் மேம்படுத்துகிறது. நம் தோலில் ஏற்படும் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து என்றும் இளமையானவராக மாற்றும் வல்லமை கொய்யவிடம் உள்ளது.
இன்றைய காலத்தில் மது போதைக்கு அடிமையான பலரும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யா பழத்தை அதிகம் சாப்பிடலாம். மேலும் கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை மற்றும் மது அருந்த வேண்டும் என்ற வெறி எல்லாம் சுக்கு நூறாகிவிடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யா சிறந்த மருந்தாகும்.
கொய்யா மரத்தில் உள்ள சில பகுதிகளுடன் அதன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வகையான கஷாயத்தை பெண்கள் அருந்தினால் தங்கள் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற இது மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் பல முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது கொய்யா பழம் சாப்பிட கூடாது?
நாம் உணவு உட்கொள்வதற்கு முன் கொய்யா பழத்தை சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. நீங்கள் உணவு உட்கொண்ட பின்போ அல்லது உணவு உட்கொள்ளுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.
முக்கியமாக இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
நோயால் அவதியுற்று அதனால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருபவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டால் உடனே மருந்து முறிவு ஏற்படும். அளவிற்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து உங்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. எனவே ஒரு சிலருக்கு இப்பழம் சாப்பிட உடன் மயக்கத்தை ஏற்படுத்தும். மேலும் ஆஸ்துமா, வாதநோய் போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடுவது ந;நல்லதல்ல.
பலரும் இரவு உணவுக்கு பின் பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும் ஆனால் கொய்யாப்பழத்தை இரவில் அறவே சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் உங்களுக்கு வயிறு வலி உண்டாகும்.
முடிவுரை:
அளவுடன் கொய்யாவை உண்டு வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான கொய்யா பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனியை பற்றி தெரிந்துகொள்ளலாம். இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல்
தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு: இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு
தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
Comments
Post a Comment