ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின்கள்?
பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.
பழங்களில் மிகச் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் C. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும்.
உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஆரஞ்சு சாறோ குடிக்கலாம். இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சினை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.
ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும். அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும். ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும். நாம் உண்ணும் ஆரஞ்சுப் பழத்தைதில் A,B,C ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். ஆரஞ்சில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.
முகத்தை அழகாக்க?
ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
குடல் சுத்தமாக?
தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். முக்கியமாக அஜீரணக் குறைபாடுகளைச் சரிசெய்யும் ஆற்றல் இந்த ஆரஞ்சுப் பழச்சாறுக்கு உண்டு. ஆரஞ்சுப் பழச்சாற்றைக் கொடுத்தால் அஜீரணக் கோளாறு காரணமாக பேதியாகும் போது ஆரஞ்சு பழச்சாற்றை குடிப்பதன் மூலம் பேதி நின்று உடனே சரியாகும். மேலும் சளி, காசநோய், தொண்டைப்புண் மற்றும் ஆஸ்துமா, முதலியவை குணமாகும். அதுமட்டும் அல்லாமல் இதய நோய்,நெஞ்சுவலி மற்றும் எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு பழம்.
முடியாதவர்களுக்கு உகந்த உணவு?
நோய்வாய் பட்டவர்கள் படுக்கையில் இருக்கும்போது அவர்களுக்கு எந்தவித உணவும் ருசிக்காது. அதனால் அவர்கள் உணவையே தவிர்க்க முயற்சிப்பார்கள். உணவே உதுக்கும் காரணத்தால், உடல் நலம் மேலும் சோர்வடையும். இந்தக் குறைப்பாட்டைத் தவிர்க்க தான் மருத்துவர்கள் அடிக்கடி நோயாளிகளுக்கு சற்று தெம்பு ஏற்பட ஆரஞ்சுப் பழச்சாறு கொடுக்கச் சொல்வார்கள். ஏன் என்றால் நோய்வாய் பட்டவர்களுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு நன்கு ருசிக்கும் என்பதால் தான்.
தாய்ப்பாலுக்கு ஈடாக?
தற்போது வளர்ந்து வரும் தலைமுறை சரியான ஊட்டச்சத்து மற்றும் சரியான உணவு முறை இல்லாததால் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படும். தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு அற்புதமான உணவாகப் பயன்படுகிறது. ஆனால், கைக்குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாற்றை கொடுக்கும் போது பாதிக்கு பாதி அளவு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தனித்த சாறாகவே கொடுக்காலம் அல்லது பழத்தை உரித்துக் கொடுத்து குழந்தைகளை உண்ணச் சொல்லலாம்.
நிம்மதியான தூக்கத்திற்கு?
இன்றைய வேகமான காலகட்டத்தில் சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் தூங்கச் செல்லும்முன் 100 மி.லி. ஆரஞ்சுப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.
சிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர். இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன. முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது.
குழந்தை வளர்ச்சிக்கு?
குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
மெலிந்த உடல் பலமடைய?
பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.
இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.
இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.
பெண்களுக்கு ஏற்றது?
மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்
பல் உறுதியாக?
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
1. தலைவலி, காய்ச்சலில் ஆரம்பித்து இதயநோய் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் ஆறுதல் தரும் ஆரஞ்சு. ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்
2. இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற பாதைகளில் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை கரோனரி இங்கேமியா என்பார்கள். இதயத்தின் வலுவைக் குறைக்கும் இந்த நோய்க்கும் அருமையான மருந்து ஆரஞ்சுச் சாறு.
3. பொதுவாக நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாகி, சர்க்கரைச் சத்தாக நம் உடம்பில் சேர்கிறது. அதை ஆரஞ்சுப் பழம் ஒட்டுமொத்தமாக சர்க்கரை (Sugar) யின் உறைவிடமாகவே இருக்கிறது. இதனால்தான் க்ளுகோஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எனர்ஜி அளிக்க முடிகிறது ஆரஞ்சு ஜூஸால்.
4. தொண்டையில் புண், தொண்டை வறட்சி போன்ற சின்னப் பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும் ஆரஞ்சுச் சாறு. உப்புத்தன்மை அதிகமாகி உடல் நச்சுத் தன்மையாகும்போது சமநிலைப்படுத்தும் (Balance) சக்தியும் ஆரஞ்சுப் பழத்துக்கு இருக்கிறது.
5. டைபாய்டு காய்ச்சல், டி.பி., அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரம்தான் சிறந்தது. திரவ ஆகாரங்களில் சிறந்தது ஆரஞ்சு ஜூஸ்.
6. பழத்தின் தோலை நீர் சேர்த்து மைய அரைத்து களிம்பு போல தயாரித்து வைத்துக் கொள்ளலாம். முகப்பருக்களை விரட்டியடிக்கும் வில்லனாகச் செயல்படும் இந்தக் களிம்பு.
7. டிஸ்பெப்ஸியா எனப்படும் பசியின்மை நோய்க்கு அசத்தலான மருந்து ஆரஞ்சு. செரிமானச் சுரப்பிகளை செல்லமாகத் தட்டிக் கொடுத்து துரிதப்படுத்தி, சாப்பிடத் தூண்டும் சக்தி ஆரஞ்சுக்கு உண்டு. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து போன பல் அமைப்பை சீரமைப்பதிலும் அனுபவம் வாய்ந்த கொத்தனார் ஆரஞ்சு.
8. ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.
9. மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்.
10. இத்தகைய நற்பண்புகளைக் கொண்டுள்ள இந்த ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து 99 மில்லிகிராம் அமைந்திருக்கிறது. மேலும் வைட்டமின் பி-1 34 மில்லி கிராமும், பி-2, 17 மில்லி கிராமும், சி-19 மில்லி கிராம் என்ற அளவில் அமைந்துள்ளன. அதில் காணப்படும் சுண்ணாம்புச் சத்தின் அளவு 14 மில்லிகிராம் ஆகும்.
முடிவுரை!
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த ஆரஞ்சுப்பழத்தை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியம் பெறுவோம். இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம். இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல்
தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
Comments
Post a Comment