அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?(Dry Fig Fruit Benefits in Tamil Health Tips)


பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் இன்றைய நவீன காலத்தில் அதை பாத்திருக்கக்கூடமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்க கூடிய பொருளும் அல்ல. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும், எல்லா இடத்திலும் கிடைக்கும்.

பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள். இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட, இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை(Dry Fig Fruit Benefits in Tamil Health Tips) சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.

தினமும் ஒரு உளர் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


இயற்கை முறை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்:-

நம்முடைய உடலுக்கு இயற்கை முறை மருத்துவமே சிறந்ததாக கருதப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் வீட்டிலே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சிறு பொருள் முதல் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. நம்முடைய உணவு முறையை சரி செய்தாலே நம்முடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்(Dry Fig Fruit Benefits in Tamil Health Tips).


வைட்டமின் சத்து அதிகம் உள்ள அத்திப்பழம்:-

அத்திப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் மற்ற பழங்களை இந்த அத்திபழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இதனால் இந்த அத்திப்பழத்தை நாம் அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.மேலும் நம் உடலுக்கு ஆற்றலும் தரும்.

நமது தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360-தளத்தின் சிறப்பு:- 

வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு எவ்வாறு நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பதை பற்றி பல பதிவுகளை நமது வலைத்தளமான தமிழ் ஹெல்த் டிப்ஸ்360-யில் சாதாரண மக்களுக்கும் தெளிவாக புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே  அப்படியான ஒரு பதிவு தான் இந்த அத்திப்பழம்.

எடை குறைக்கலாம் (Dry Fig Fruit Help To Weight Loss ):-

இன்றைய காலத்தில் பாஸ்ட் புட் வருகை அதிகரிப்பதால் அதன் விளைவு இன்றைய இளைய தலை முறைக்கு எடை அதிகரிப்பது பெரும் பிரச்சனையாகவே உள்ளது.
தற்போது ஆண், பெண் இருவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை இந்த எடை அதிகரிப்பு. குறிப்பாக திருமணத்திற்கு தயாராகும் ஆண், பெண்களுக்கு மிக பெரிய தலைவலியே இந்த எடை அதிகரிப்பு தான்.  

இதனால் நம்மில் பலருக்கும் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நினைப்பவர்கள் இந்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்  கிடைக்கும். இந்த உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவு. எனவே குறைந்த அளவே கொழுப்பை பெற முடியும். இதனால் உடல் எடை குறையும்.

ஆண்/பெண்  இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்க உதவும் அத்திப்பழம்:- (Dry Fig Fruit Benefits in Tamil Health Tips)

பண்டைய காலத்தில் உள்ள இதிகாசங்களின் படி, கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வூக்கியாக பயன்படுத்தி வந்தனர் என பல குறிப்புக்கள் உள்ளது. அத்திப்பழமானது புனிதமான பழமாகவும், காதல் மற்றும் கருவுறுதலுக்கு நெருங்கிய தொடர்புடையதாகவும் இன்றளவும் கருதப்பட்டு வருகிறது



அத்திப்பழம் பெண்களுக்கு கருவுறுவதை அதிகரிக்கவும், ஆண்களுக்கு பாலுணர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது. இதனால் ஒரு ஆரோக்கியமான தலை முறையை இன்றைய காலத்தில் உருவாக்க அத்திப்பழம் பெரும் உதவியாக உள்ளது என்றால் மிகை இல்லை.

விஞ்ஞானரீதியாக, சொல்ல வேண்டும் என்றால் அத்திப்பழத்தில் உள்ள மாங்கனீசு, ஜிங்க் மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் இதற்கு முக்கிய காரணம்.

வயிற்றில் செரிமான பிரச்னைகள் அனைத்தையும் நீக்க உதவும் அத்திப்பழம்:- (Dry Fig Fruit Benefits in Tamil Health Tips):-

உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் 3 அல்லது 4 அத்திப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய நார்ச்சத்துக்கள் கிடைக்கின்றது. இதனால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும் இதனால் பசியின்மை பிரச்சனையும் முற்றிலும் நீங்கும். 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது அத்திப்பழம்:-

 உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் அதிகம் நிறைந்துள்ளது

இரத்த சோகையை தடுக்க உதவும் அத்திப்பழம்:-

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.

இரத்த அழுத்தம் தடுக்க உதவும் அத்திப்பழம்:-

நம்முடைய உடலில் சேர்த்து கொள்ளவும் உப்பின் அளவு அதிகமா இருந்தால் அது சோடியத்தின் அளவை அதிகரிக்கும்(Dry Fig Fruit Benefits in Tamil Health Tips). இதனால் நம்முடைய உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறிக்கியது, எனவே நமக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு அத்திப்பழம் நல்ல தீர்வாக இருக்கும். தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் இந்த இரத்த அழுத்தம் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.


புற்றுநோயை தடுக்கும் தடுக்க உதவும் அத்திப்பழம்:-

அத்தி பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் அது புற்றுநோய்க்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கும். நம்முடைய உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை இது தடுத்து நம்மை பாதுகாக்கிறது. எனவே இனிமேல் மார்க்கெட் சென்றால் இந்த அத்திப்பழத்தை மறக்காமல் வாங்கி தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.

இதய நோய் வராமல் தடுக்கும் அத்திப்பழம்:- (Dry Fig Fruit Benefits in Tamil Health Tips):-

இந்த அத்தி பழத்தில் அதிகளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதால் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்கிறது. இதனால் இதயத்திற்கு சீராக இரத்தம் செல்கிறது.எனவே நமக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம்.இனிமேல் தினமும் ஒன்று இல்ல இரண்டு அத்தி பலன்களை சாப்பிடுவது நம் இதயத்திற்கு மிகவும் நல்லது.

எலும்புகளை வலிமையாக்கும் அத்திப்பழம்:-

தினமும் அத்திப்பழத்தை சாப்பிடுவதால் அது நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.ஒரு அத்தி பழத்தில் 3% கால்சியம் உள்ளது. இது நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தீயன கால்சியத்தின் அளவாகும். எனவே இது எலும்புகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.

நீரிழிவு நோயை தடுக்க உதவும் அத்திப்பழம்:-

உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.

மேலும் சில சுருக்கங்கள்:-

அத்தி பழத்தை தினமும் சாப்பிடுவத்தல் இரத்த ஓட்டம் நன்கு சீராகும்.

உலர் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். எனவே இதனை நீரிழிவு நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்(dry fig fruit benefits in tamil). மருத்துவரிடம் ஆலோசனை கேட்டல் அவர் ஒரு நாளைக்கு எத்தனை அத்திப்பழம் சாப்பிடலாம் என கூறுவார் அதன் படி நடந்து உங்கள் வாழ்க்கையை வளமாக்குங்கள்.

அத்தி பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் இது போன்ற ஆரோக்கியான மருத்துவ குறிப்புகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பெல் பட்டன்- க்ளிக் செய்யவும்.

முடிவுரை:-

அளவுடன் அத்தி பழத்தை உண்டு வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்தஅத்தி பழத்தை நமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம்ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான அத்தி பழத்தை, பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.

மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லது தானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.



குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள்நோயின்றி  வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு   தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.

Comments