அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

என்னது! சாதாரண வெங்காயத்தில் இவ்வளவு? மருத்துவ குணங்களா?

வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.

பல நாடுகளில் இன்றும் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். அக்காலத்தில் வீட்டிலே நமது முன்னோர்களான பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

உலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் மிகச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

கண்ணீர் வருவதற்கு முக்கிய காரணம் என்ன:-  

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் தண்டுள்ள சின்ன செடி தான். இதோட உண்மையான தண்டு செதில் இலைகளால் மூடப்பட்டு குமிழ் தண்டாக காணப்படுகிறது. இந்த தண்டில் இருந்து பசுமையான இலைகள் வெளிவரும்.
வெங்காயத்தின் தண்டு ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை, கிருமிகளுக்கு எதிரானது. வீக்கம், வலி போக உதவும்.

வெங்காயத்தில் பல வகை உண்டு. நாம் அதிகம் பயன்படுத்துவது கீழ்கண்ட இரு வகை மட்டும் தான்:-



1. சிறிய வெங்காயம்

2. பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்)
இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

எகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர்.

வெங்காயத்தை  பச்சையாகவே சாப்பிடுங்கள்:-



வெங்காயத்தில் வைட்டமின் ‘C’ சத்து மிக அதிகமாகவே உள்ளது. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் தான் இந்தச் சத்து அதிகமாக உள்ளது. ஆகவே தான் நம் முன்னோர்கள் கஞ்சிக்கு வெங்காயம் வைத்தே தங்கள் சாப்பாட்டை முடித்து விடுவார்கள். அவர்கள் இன்றளவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது என்றால் மிகை இல்லை. 

உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.

பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாக நம்மால் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடுவது மிக நல்லது.

உடல் பருமனைக் குறைக்க(Weight Loss):-

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


முகம் அழகு பெற உதவும் வெங்காயம்:-


உதவும் இரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. 

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

உஷ்ணக் கடுப்பு நீங்க உதவும் வெங்காயம்:-

பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

வெங்காயத்தின் முக்கிய "50" அற்புத மருத்துவ குணங்கள்:-





  1. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
  2. தினமும் 3 வெங்காயம் சாப்பிட்டுவர வயதிற்கு வந்த பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும். வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுத்தல் போன்ற பிரச்சனைகள தீரும். வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
  3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
  4. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
  5. நமக்கு அடிக்கடி ஏற்படும் சில தலைவலிகளைக் வெங்காய நெடி குறைக்கும். வெங்காயத்தை நன்கு வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு போன்ற வியாதிகள் அனைத்தும் நீங்கும்.
  6. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் நன்கு பலமாகும்.
  7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
  8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும். பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.
  9. நான்கு அல்லது ஐந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது அளவு வெல்லத்தைச் சேர்த்து நன்கு அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  10. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத நம் கட்டிகள் மேல் வைத்துக்கட்ட உடனே பழுத்து உடையும்.

  11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  12. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
  13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
  14. திடீரென ஏற்படும் மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி அவர்களை முகரவைத்தால் மூர்ச்சை விரைவில் தெளியும்.
  15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் மற்றும் குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி  உடனே நிற்கும்.
  16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
  17. பனைமரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு நன்கு சூடுபடுத்தி குடித்து வர மேக நோய் நீங்கும்.
  18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து கொண்டு அரைத்து சாப்பிட மேக நோய் குறையும்.
  19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
  20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
  21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
  22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
  23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
  24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
  25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
  26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
  27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
  28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் விரைவில் ஜலதோஷம் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
  29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
  30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
  31. ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
  32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
  33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
  34. காலரா பரவியுள்ள நபர்கள் முக்கியமாக பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா அரவே தாக்காது.
  35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
  36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
  37. திட்டுத்திட்டாக தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் அவர்கள் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தலையில் தேய்த்துவர முடிவளரும்.
  38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
  39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
  40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
  41. வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
  42. வெங்காயத்தை அப்படியே பசும் தயிருடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
  43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
  44. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
  45. வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட வர, மலச்சிக்கல் குறையும்.
  46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
  47. குறிப்பாக மாரடைப்பு நோயாளிகள் மற்றும்ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
  48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
  49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியையும், மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. அது நல்ல உடல் தேற்றும் சக்தி டானிக்காகவும் திகழ்கிறது.
  50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்தும் அதிகம் கிடைக்கும். 
வெங்காயத்தை சமயலுக்கு பயன்படுத்துவதோடு, மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.
ஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

முடிவுரை:-

அளவுடன் வெங்காயத்தை உண்டு வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.

இத்தனை பயன்களைக் கொண்ட இந்த வெங்காயத்தை நமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம்.  ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான வெங்காயத்தின், பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். 
மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லது தானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.  இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல்  தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு   தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.

Comments