அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

வாழை பழத்தில் இருக்கு 1000 நன்மைகள்? Banana Health Tips!

பழங்கள் சாப்பிடுவதில் பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கம்! 

வாழை பழத்தை பொறுத்த வரையில் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது. ஏழை எளிய மக்கள் விரும்பி வாங்கும் பழம் வாழைப் பழம். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ற சத்தான பழம் தான் செவ்வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. அதில் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. அநேக மக்கள் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பலரும் தங்கள் உணவை முடித்த பின்பு பழம் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. உண்மையில் அது தவறு.  


நீங்கள் முதலில் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் செரிக்கும். நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணமாக கூடுதல் நேரமாகும். நீங்கள் சாப்பிட்ட உணவு செரிக்காத நிலையில் உடனே பழம் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானம் ஆகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். எனவே, சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்டு 1 மணி நேரத்திற்கு பின்னர் பழம் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது.

பழங்களைத் தனியாக சாப்பிடாமல். அதனை சிறிது சக்கரை சேர்த்து மிக்சியில் அரைத்து ஜூசாகக் குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது சரியான பழக்கம் அல்ல. பழங்களை  ஜூசாக சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் தான் உங்களுக்கு அப்பழத்தின் நார்ச் சத்து முழுவதுமாக கிடைக்கும்.
வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிக அளவு இருப்பதால், இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வது இதய கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். 

மா,பலா, வாழை ஆகிய முக்கனிகளில் ஒன்று தான் வாழைப்பழம். வாழைப்பழங்களில் பலவகைகள் உண்டு என்பது நாம் அறிந்தது. எல்லாவகை வாழைப்பழங்களிலும் பலவகை சத்துக்கள் உண்டு. அதுமட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும்,  கிடைக்கக்கூடிய ஒரே பழம் வாழைப்பழம், ஏற்ற தாழ்வுகளை கடந்த பழம் என்றே கூறலாம். இதை ஏழைகளின் கனி என்று பலரும் கூறுவார்கள்.

வாழைப்பழம் மூன்று வகை இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar)  கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), ஃபிரக்டோஸ் (Fructose), குளுகோஸ் (Glucose)  உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber)  வாழைப்பழம் கொண்டுள்ளது என்றல் மிகை அல்ல.

பச்சை வாழைப்பழம்

  • பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும். எப்போதும் கோடைக் காலங்களில் தாராளமாக உண்ணலாம். ஆனால் குளிர் காலத்தில் அதிகம் சாப்பிட்டால் சளி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  
  • வாத நோயாளிகள் பச்சை வாழைப்பழத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

ரஸ்தாளி வாழைப்பழம்

  • ரஸ்தாளிப் வாழைப்பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பழம். 
  • குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களும் இதில் அடங்கி உள்ளன. இப்பழத்தை நாள்தோறும் உண்டு வந்தால் இருதயம் பலப்படும்.

பூவன் வாழைப்பழம் (பூவம் பழம்) 

  • பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் வாழைப்பழம். 
  • இது ஜீரண சக்தியை உண்டாக்கும் வேலையை செய்கிறது. தினமும் உணவிற்குப்பின் பூவன் வாழைப் பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாவது தவிர்க்கப்படும்.

மொந்தன் வாழைப்பழம்

  • மொந்தன் வாழைப்பழம் பொறுத்தவரையில் உங்கள் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். மஞ்சள் காமாலைக்கு இது சிறந்த பழம்.

நேந்திரம் வாழைப்பழம்

  • நேந்திரம் பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில்தான் மிக அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. 
  • காச நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்பழத்தில் ஒன்றும், அதனுடன் முட்டை ஒன்றும் சேர்த்து உண்டுவர, காசநோய் விலகி உடல் நன்கு புஷ்டியாகும். 
  • சிறு குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு மேல் நன்றாகப் பழுத்த நேந்திர பழத்தை சிறிது சிறிது , வேகவைத்து நன்றாக பிசைந்து ஊட்டி வந்தால் குழந்தைக்கு சுறுசுறுப்பாக இருக்கும். இது குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்தும் கூட. ஜீரணிக்க சற்று நேரமாகும் என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.

செவ்வாழை பழத்தில் இருக்கும் நன்மைகள்? 

  • செவ்வாழைப் பழம் கேரளா மற்றும் குமரி மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். இவ்வகைப் பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், வைட்டமின் A அதிகம் உள்ளதால் கண்ணுக்கு பலம் தரும். 
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தோல் வியாதிகளையும் குணப்படுத்தும். அதிகம் பேதி கண்டவர்கள் இப்பழத்தை பொரிகடலையுடன் சேர்த்து உண்டால் பேதி நிற்கும். ஏதாவது ஒரு வாழைப் பழத்தை தினமும் உணவிற்குப் பின் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.
  • செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. செவ்வாழையில் வைட்டமின் ‘C’ சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக இதில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. மேலும்  செவ்வாழையில் 50% (சதவிகிதம்) நார்ச்சத்து அதாவது பாதிக்கு பாதி காணப்படுகிறது.


பல்வலி குணமடைய வேண்டுமா?   

  • நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாத வலி என்றல் அது பல்வலி தான். குறிப்பாக பல்வலி மற்றும் பல்லசைவு என பலவகையான பல் வியாதிகளுக்கும் செவ்வாழை அறிய மருந்தாகும். 
  • பல் சம்பத்தப்பட்ட நோய்கள் அடிக்கடி ஏற்பட்டால் விடாமல் தொடர்ந்து 21 நாள் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் ஏற்கனவே ஆடிய பல் கூட வலுப்படும்.

நரம்பு தளர்ச்சி குணமடைய வேண்டுமா? 

  • நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். 
  • தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

தொற்றுநோய் தடுக்க?

  • செவ்வாழைப்பழத்திற்கு தொற்று நோய் கிருமிகளைக் அழிக்கும் ஆற்றல் உள்ளது. செவ்வாழையை மறக்காமல் வாரம் ஒருமுறை  விடாமல் சாப்பிட்டு வர உடலில் தேவையற்ற தொற்று நோய் கிருமிகள் பாதிப்பு கட்டுப்படும்.
  • வாழைப்பழம் என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய வெறும் ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்த்தடுப்பு நாசினியும் கூட. என்பதால் தான் இதை நாம் தினமும் உண்ண வேண்டும்.
  • வாழைப்பழம் மனித மூளைக்குத் தேவையான முழு புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
  • இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான மற்றும் ஊக்கமுள்ள ஊட்டச்சத்தைக் கொடுப்பதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் கல்வில் சிறக்க?

  • மாணவ, மாணவிகளுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உண்ணும் உணவுடன் சேர்த்துக் கொடுத்துச் சோதனை செய்து பார்த்தபோது மாணவ, மாணவிகளுக்கு மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு மாணவ, மாணவிகளுக்கு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மலச்சிக்கல் சரி ஆக? 

உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான ஃபைபர் இருப்பதால் உங்கள் குடலைச் சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியைச் சுத்தமாகப் போக்கிவிடுகிறது.

நெஞ்செரிப்பு  சரியாக? 

  • உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்புச் சக்தி இருப்பதால் வாழைப்பழத்தைத் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டுப் பறந்துவிடும்.
  • உடல் பருமன் : ஆஸ்திரியாவில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்த 5000 நோயாளிகளுக்கு வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்தார்கள்.
  • பின்னர் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு நிலைத்தன்மைக்குக் கொண்டு வந்து அதன்மூலம் அவர்களது உடல்பருமன் குறைவதாகத் தெரிவிக்கின்றார்கள்.

குடற்புண் குணமாக? 

  • வாழைப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமலும் காக்கிறது.
  • வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பைக் கட்டுக்கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவைச் சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

இரத்தச் சோகை தீர?  

  • வாழைப்பழத்தில் மிகுந்த அளவு இரும்புச் சத்து(அயன் சத்து)  இருப்பதால் அது அதிக அளவு சிவப்பணுக்களை உருவாக்கி இரத்தச் சோகை வராமல் தடுக்கும் ஆற்றளுடன் திகழ்கிறது. 

முடிவுரை: 

இது மட்டும் இல்லை பல கோடிக்கணக்கான பலன்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு நாளும் நலம் பெற தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360-ன் வாழ்த்துக்கள்! 

குறிப்பு:இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. 

Comments

  1. வாழைப்பழத்தின் மிக சிறந்த நன்மைகள்?...............
    https://www.healthtips4.com/2021/06/banana-fruit-benefits-in-tamil.html

    ReplyDelete

Post a Comment