அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

100 வருடம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா! இத படிங்க முதல! Amla Health Benefits in Tamil

நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்:- (Amla Health Benefits in Tamil)

அன்றாடம் நமது உடலை ஆரோக்கியமாகவும், திடமாகவும்  வைத்துக் கொள்வதில் முக்கியத்துவமாக இருப்பது உணவுப் பொருட்களும், நமது பழக்கவழக்கங்களும் தான். தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை எப்போதும் இளமையுடனும், சுறு சுறுப்புடனும் இருக்கலாம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் வாழ்நாளில் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ நெல்லிக்கனி முக்கிய பங்காற்றுகிறது. 

நெல்லிக்காயில் என்ன என்ன வகை உண்டு? (Varieties of Amla in Tamil) 

நெல்லிக்காயில் பல வகையுண்டு அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால்:   
1. பெருநெல்லி 
2. கருநெல்லி
3. அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும். 

நெல்லிக்கனியில் எத்தனை சுவை உண்டு? 

ஐந்து வகை சுவை கொண்டது நெல்லிக்கனி,  ஆறு சுவைகளில் முக்கியமாக இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. 

நெல்லிக்கனியில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன? (How Many Vitamins in Amla)


1. இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.
2. உயிர்ச்சத்துக்களான A, B, C என்ற மூன்றும் அடங்கியுள்ளன.
3. பித்தம் தணிக்கும் ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், இரத்தசோகை, ஆரோடசிகம், கண்நோய், காமாலை போன்ற நோய்களுக்கு நெல்லிக்காய் அருமருந்தாகும்.
4. நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து நமது உடல் எடையானது மிக விரைவில் குறையும்.
5. நோயற்றவராக இவ்வுலகில் மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ அல்லது தக்காளிச்சாறு 8 அவுன்சோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்தை வெறும் அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது என்றால் மிகை இல்லை. 
6. நெல்லி மரத்தின் வேர், பட்டை, இலைகள், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப் பயனுள்ள பகுதிகள் ஆகும். மஞ்சள் காமாலை, இரத்தச் சோகை, சிறுநீரகக் கோளாறு மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளின் கணையத்தை வலுபடுத்த இது உதவும். வயது முதிர்வினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, நமது உடல் உறுப்புகளை நல்ல ஆரோக்கியமான நிலையில் வைக்கும் திறன் இக்கனிக்கு உண்டு.
7. புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும்.
8. பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும். இது இதயத்திற்கு வலு சேர்க்கிறது அதோடு மட்டும் அல்லாமல்  கண் நோய், இரத்தப்பெருக்கு, குடற்புண், மற்றும் நீரிழிவு  ஆகியவற்றைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது.
9.  பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வருவதன் மூலம் வளரும் குழந்தைகள் நல்ல தேக ஆரோக்கியத்துடன், பொலிவுடனும் திகழ்வார்கள். 
10. நாள் தவறாது நெல்லியை உட்கொண்டால் நமது நினைவாற்றல் அதிகரிக்கும் மேலும் கண்பார்வை துல்லியமாகவும், தெளிவாகவும் தெரியும். புத்திக்கூர்மையை அதிகரிக்கும்.

 11. வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

12. நெல்லிக்காயை ஊறுகாயாக உணவில் சேர்த்து சாப்பிட்டால் அது நல்ல சுவை தரும்.  இதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற பித்தம் குறையும்,  நாம் உண்ட உணவு எளிதில் செரிக்கும் ஆற்றலை தருகிறது. 
13.உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
14. நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும்.
15. தலையில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிவை  தவிர்க்கப்பதுடன், முடி நன்கு கரு கரு என வளரவும், எந்தவித பொடுகு தொல்லையும் இன்றி, மூளையைக் நன்கு குளிர்ச்சியாக வைத்து கொள்ள அனைத்து வித வகைகளிலும் சுகம் அளிக்கக்கும் ஆற்றல் நெல்லிக்கு உண்டு.
16. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி நம்  முன்னோர்கள் றிந்து இருந்தனர்  என்று ஆயுர்வேத(Ayurveda) சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது . நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்து வந்துள்ளனர்.
17. உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று எண்ணி கார்த்திகை(நவம்பர்) மாதம் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜித்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. 
18. கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். 
19. நெல்லிக்காயில் உள்ள சுண்ணாம்பு, இரும்பு சத்து  நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. 
20. நினைவாற்றல் கூடும்மாணவர்கள் இதனை  குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லி இலை சாற்றை கொப்பளித்து அதன் காயை உண்டால் உடனே உங்கள் வியாதி நீங்கும்.

குறிப்பு:இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. 

Another Post:
பேரீச்சப்பழத்தை தினமும் சாப்பிட்டால் என்ன என்ன பயன்கள்!!!

Comments