கிர்ணிப்பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள் Muskmelon (Kharbuja) /Cantaloupe Health Benefits in Tamil:-
நமது உடலின் தலை முதல் கால் பாதம்
வரை நம் அழகைப் பாதுகாக்கும்
ஒரு அற்புத சக்தி கிர்ணிப்பழத்திற்கு
உண்டு. இதனை முலாம் பழம் என்றும் அழைப்பார்.
இந்த பழத்தில் அதிக நீர்ச்சத்து 65%, அதிக நார்ச்சத்து ( 1g/கப்), குறைந்த கலோரிகள் (53/கப்), மற்றும் 0(Zero) %கொழுப்பு உள்ளதால் குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடலாம்.
நீர்வறட்சியை
போக்குவதோட உடல்பருமனையும் குறைக்கும் ஆற்றல் கிர்ணிக்கு உண்டு,
இருதயநோய், புற்றுநோய், மலச்சிக்கல், கண், சரும
பாதுகாப்பு, நோயெதிர்ப்பு, ஞாபகத்திறன், புத்துணர்ச்சிகளை தருவதோடு, சிகரெட்டில்
உள்ள, Benzapyrene என்ற நச்சுத்தன்மையை போக்க
இப்பழத்திலிருக்கும் கரோட்டினாய்டுகள் உதவி புரிகின்றது. மேலும் புகைப்பழக்கத்தை கைவிடவும் கிர்ணிப்பழம் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பழத்தின் அளவற்ற மருத்துவ பயன்களை சற்று விரிவாக கீழ்க்கண்டவாறு காணலாம்.
என்ன என்ன சத்துக்கள் உள்ளது
கிர்ணிப்பழத்தில்:-
நமது உடலின் நீர்ச்சத்து குறையும்
போது, கூடவே சோடியம் & பொட்டாசியம்
சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம்.
நீர்ச்சத்து
இழப்பை ஈடுகட்ட பழ ஜூஸ்
எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக கிர்ணி, தர்பூசணி, திராட்சை
மற்றும் இளநீர் போன்றவற்றில் பொட்டாசியம்,
சோடியம், தண்ணீர் என மூன்றுமே
இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக்
கொள்ளலாம்.
புரதம்,
நார்ச்சத்து, கொழுப்பு, பாஸ்பரஸ் மெக்னீஷியம், சுண்ணாம்புச்சத்து, இரும்புச் சத்து என சகலத்தையும்
தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கிர்ணிப்பழம்,
உடல் குளிர்ச்சிக்கும் மிக உகந்தது. இத்தனை
சத்துக்களை கொண்டிருப்பதால், இவை எளிதில் ஜீரணமாகாமலும்
போகலாம். அதனால் நீங்கள் எப்போதும்
இதனுடன் வெல்லத்தை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இந்த பழத்தில்,
புரதமும், கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால் கேசத்துக்கு
உறுதியையும், சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக
இருக்கிறது.
சிறு நீரக கல்லுக்கு சிறந்த
தீர்வை தரும் கிர்ணிப்பழம்:-
நமது சிறுநீரகத்தில் உள்ள கல்லையும் அசால்ட்டாக
கரைய வைக்கும் வல்லமை கொண்டது கிர்ணிப்பழம்.
எனவே, கிர்ணிப்பழ சீஸன் சமயங்களில் கூடுமானவரை
இதைத் தவிர்க்காமல் நன்கு சாப்பிட்டுவிடுங்கள்.
முகம் பளிச்சிட உதவும் கிர்ணிப்பழம் Muskmelon (Kharbuja) :-
சிலருக்கு
முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் பொலிவு
இழந்து டல்லடிக்கும், அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு
ஒன்றைக் கைகளால் நன்கு மசித்து,
முகத்தில் பூசி கழுவினால் போதும்
அடுத்து பாருங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.
ஓட்ஸ்,
சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து,
நமது தோலில் உள்ள கரும்புள்ளிகளை
மறையச் செய்யும். கிர்ணிப்பழ விதை தலைமுடிக்கு நல்ல
கண்டிஷனராகவும் செயல்படும்.
50 வயதை கடந்தும் முக சுருக்கம் இன்றி அழகாக ஜொலிக்க:- Muskmelon (Kharbuja)
பொதுவாகவே
50 வயதுக்கு மேல் உள்ள ஆண்
அல்லது பெண் இரு பாலருக்கும்
தோலில் எண்ணெய் பசை குறைந்து,
வறண்டு போகும். இதனால் பியூட்டி
பார்லரில், வேக்சிங் அல்லது திரெடிங் போன்றவற்றைச்
செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு
அது விகாரமாகத் தோன்றும், இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ்,
வெள்ளரி ஜுஸ் ஆகிய இரண்டையும்,
சமஅளவு கலந்து தடவினால் வீக்கம்
குறைந்து தோல் மிருதுவாகும்.
நூறு கிராம் கிர்ணிப்பழ விதையுடன்
பயத்தம்பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ
சேர்த்து வாரம் ஒருமுறை தலையில்
தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு முடியின்
நல்ல பளபளப்பும் கூடும்.
உடல் சூட்டை போக்கும் கிர்ணிப்பழம்:-
எடை குறைவு, பசியின்மை, அமிலத்
தன்மை, அல்சர், சிறுநீர் பாதைக்
கோளாறு, மலச்சிக்கல் ஆகிய அனைத்துக்கும் நல்லது.
பசியின்மையை சரி செய்து, களைப்பை
நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும். வேறு எந்தப் பழமும்
இதைப் போல வேகமாக உடல்
சூட்டைத் தணிப்பதில்லை.
கிர்ணிப்பழ
விதையைக் நன்கு காய வைத்து
அரைத்த பவுடர் மற்றும் ஓட்ஸ்
பவுடர் இரண்டையும், சமஅளவு எடுத்து கொள்ளுங்கள்.
இதை பேஸ்ட் போல கலக்கும்
அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து
தலை முடி முதல் நம்
கால் பாதம் வரை தேய்த்துக்
குளியுங்கள். இது எண்ணெய், தேய்த்துக்
குளித்தது போல நமது உடலிற்கு
குளிர்ச்சியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண்
நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதற்கு தினமும்
2 கிர்ணிப்பழ துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். கண்கள் நன்கு பிரகாசிக்கும்.
ஒரு கப் கிர்ணி பழத்தில்
உள்ள கலோரி மட்டும் 54.6, அதில்
வைட்டமின் ஏ மற்றும் சி,
பொட்டாசியம் மூன்றும் இதில் அதிகமுண்டு.
வயிற்று
கோளாறுகளை ஓட விடும் கிர்ணிப்பழம் Muskmelon (Kharbuja) :-
கிர்ணிப்பழ
விழுதுடன் இஞ்சிச்சாறு, உப்பு, சிறிது
சீரகமும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் என
அனைத்தும் குணமாகும்.
கிர்ணி
விதை பவுடரை தேனில் கலந்து
சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
பசியின்மை,
எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர்
பாதைக் கோளாறு, அமிலத் தன்மை,
அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது
கிர்ணி பழம்.
பசியின்மையை
சரி செய்து, களைப்பை நீக்கி,
வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும்.வேறு எந்தப் பழமும்
இதைப் போல வேகமாக உடல்
சூட்டைத் தணிப்பதில்லை.
மேலும்
சில அதிரடி டிப்ஸ்:-
- உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண்
நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு
கிர்ணிப்பழத் துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள், கண்கள் பிரகாசிக்கும்
- கிர்ணிப்பழ
விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது
சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும்.
- இரண்டு
டீஸ்பூன் கிர்ணிப்பழ விழுதை ஒரு டம்ளர்
பாலில் கலந்து குடித்துவர, இளம்
தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.
- கிர்ணிப்பழத்துடன்
சிறிது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் சொறி, சிரங்கு போன்ற
தோல் நோய்கள் அண்டாது.
- சின்னச்
சின்ன விஷப் பூச்சிக்கடிக்கு கிர்ணிப்பழ
விதை பவுடரைப் பூசினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.0
- கிர்ணி
விதை பவுடரை தேனில் கலந்து
சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
- மலச்சிக்கலுக்கு
அருமருந்து கிர்ணிப்பழம், இதன் காயை கூட்டு,
குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.
முடிவுரை:-
அளவுடன் கிர்ணிப்பழத்தை உண்டு வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த கிர்ணிப்பழத்தை நம் அன்றாடம் சிறிதலாவவுது சேர்த்து,நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான , கிர்ணிப்பழத்தை பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.
நமக்கு நோய் வந்தபின் அவதிப்படுவதை விட வரும் முன் காப்பது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்து நமது உடல் நலத்தை பாதுகாக்கும் இது போன்ற உணவு வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்…
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”… என்பதை உணர்ந்து வாழ்வோம்!!!
இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:-
இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள்,
கட்டுரைகள்,
நோயின்றி வாழவும்,
வருமுன் காக்கவும்,
இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே.
இதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த்டிப்ஸ் 360-
பொறுப்பாகாது.
Comments
Post a Comment