திராட்சை பழம் பல நிறங்களில் காண்பவரின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பழக் கிண்ணங்களில் திராட்சைக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இனிப்புகளிலும் ஐஸ்க்ரீம்களிலும் திராட்சையின் பங்கு முக்கியமானது. ஆகையால் இந்த பழத்தை "பழங்களின் ராணி" என்று அழைப்பர்.
திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. முழு பழங்களாகவும், உலர் திராட்சை பழங்களாகவும் உட்கொள்ள படுகின்றன.
அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது .
என்ன என்ன வைட்டமின்கள் உள்ளது?
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் ஏ,பி1, பி2, பி3, பி6, பி12, சி, போன்ற வைட்டமின்கள் கொண்டுள்ளது.
மேலும் கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
திராட்சை பழத்தின் மருத்துவ குணங்கள்?
- திராட்சைக்கு ரத்த சோகை, ஜீரண கோளாறு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் ஆற்றல் உண்டு.
- ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
- பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
- நமது தினசரி உணவில் திராட்சைகளை சேர்ப்பதன் மூலம் அதிக அளவிலான பாதுகாப்பு புரதங்கள் கண்களின் ரெடினாவிற்கு கிடைக்கிறது.
- செல்லுலார் அளவில் ஏற்படும் சிக்னல் மாற்றங்களினால் கண்களுக்கு அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது திராட்சை என்று புளோரிடாவின் மியாமி பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி தெரியவந்துள்ளது.
- திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
- சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
- உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் மிக ஏற்றது.
- திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
- ரெஸ்வெரடால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . இதன்மூலம் அது மனரீதியான பதில்களை வேகமாக அதிகரிக்க உதவுகிறது மற்றும் அல்சைமர் போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்மை பயக்க, மூளைக்கு சக்தியை கூட்ட உதவுகிறது.
திராட்சை பழத்தால் பெண்களுக்கு ஏற்படும் பயன்கள்!
- திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும்.
- நாற்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ஜூஸ் தினமும் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்த் தொல்லை வராது.
- பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய்க்கு நல்ல மருந்தாக திராட்சைப் பழம் உள்ளது.
- பொதுவாக பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஆனது ஹார்மோன் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திறன் திராட்சைக்கு உண்டு, ஆகவே அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
திராட்சையை தினமும் உட்கொண்டால் என்ன என்ன பயன்கள்!
- திராட்சையை தினசரி உட்கொண்டால் முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது, முக்கியமாக கீல்வாதத்தை குறைக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.
- திராட்சை ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி என்பதால், இது மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையையும் இயல்பையும் மேம்படுத்த உதவுகிறது.
- திராட்சை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். மேலும் இருதயம் பலப்படும் . திராட்சை பல நிறங்களில் கிடைக்கிறது. இது வெள்ளை, வெளிர்பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா அல்லது கறுப்பு என பல நிறத்தில் இருக்கும்.சில வகைகளில் விதைகள் இருக்காது.
- `ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
- உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம்.
- திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
- ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
- இவ்வளவு சிறப்புகள் கொண்ட திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்பது இயற்கை மருத்துவர்களின் அறிவுரை. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அதிகமாக திராட்சை சாப்பிடுவது பலவிதத்திலும் நல்லது.
- திராட்சையில் உள்ள அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- திராட்சையை தோலுடன் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
- திராட்சையில் உள்ள பாலிபினால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைப்பதோடு முதிர்வு தன்மையை குறைக்கிறது. மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுடன் போராடி பருக்கள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
- திராட்சையில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- தினமும் இதை சாப்பிடுவதால் கண்ணில் உள்ள ரெட்டினாவில் அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க இது உதவுகிறது.
- உடலில் ஆங்காங்கே ஏற்படும் மூட்டு வலி மற்றும் வீக்கங்களை குறைக்க இது உதவுகிறது. வயதானால் ஏற்படும் மூட்டு வலியை சரி செய்ய இதை தினமும் சாப்பிட்டாலே போதுமானது.
- குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள், திராச்சை பழத்தை அதிக அளவில் சப்பிட கூடாது.
குறிப்பு: சர்க்கரை அதிகமாக இருப்பதால் இதனை அதிக அளவு உண்ண கூடாது.
முடிவுரை!
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த
திராட்சை பழத்தை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியம் பெறுவோம். இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான
திராட்சை பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல்
தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
Comments
Post a Comment