அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

இனி தொப்பையை பற்றி கவலை வேண்டாம்! அன்னாச்சி பழத்தில் உள்ளது ஆயிரம் மருத்துவ குணங்கள்!


இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் இருப்பதுடன் மருத்துவ குணங்கள் இருப்பதும் நமக்கு பல நன்மைகளை செய்கிறது.

அன்னாச்சி பழத்தின் சுவை போலவே அதன் குணங்களும் அற்புதமானது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் முக்கியமான ஒன்றே அன்னாச்சி.

சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும், புரதச்சத்து 0.60, தாது உப்புகள் 0.05, நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன.

என்ன என்ன வைட்டமின்கள் உள்ளன? 


வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும்.

ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி,  எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை சீக்கிரம் குணமடைய அன்னாச்சி பழம் உதவுகிறது.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சி  பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாச்சி  பழச்சாறு சிறந்த ஒரு மருந்தாகும்.

பித்தத்தால் ஏற்படும் வாந்தி, பசி மந்தம் நீங்க அன்னாச்சி ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் அன்னாச்சி பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.

அன்னாச்சி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடையது அன்னாச்சி பழம்.

இதயம் தொடர்பான பல நோய்களில் குறிப்பாக மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது அன்னாச்சி பழம்.

கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது  அன்னாச்சி பழம்.

பச்சைக்காய்கறிகள், வேக வைத்த காய்கறிகள் மற்றும் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

தொப்பையை குறைக்கும் மற்றும் பெண்களுக்கு ஏற்றது:

இன்று பெரும்பான்மையான மக்களிடம் காணப்படும் பெரும் பிரச்சனை தொப்பையை எப்படி குறைப்பது?

நீங்கள் இவ்வளவு காலம் கேட்ட கேள்விக்கான பதில் இதோ!
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் ஒரு சக்தி அன்னாச்சி பழத்திற்கு உண்டு. ஓர் அன்னாச்சிப்பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் பின் இரவில் அதனை அப்படியே வைத்திருந்து அதன் மறு நாள் விடியற் காலையில் அதைப் பிழிந்து நன்கு சாறு எடுத்து வெறும் வயிற்றில் அதனை சாப்பிடவேண்டும்.

பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாச்சிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

வைட்டமின் பி அதிகம் காணப்படுவதால் பெண்கள் அதிகம் எடுத்து கொள்ள உடல் ஆரோக்கியம் பெற்று, பல வியாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ள அன்னாச்சி பழம் உதவுகிறது.

சிறுநீரகக்கற்கள் கரைய உதவும் அதிசய பழம்:

நாம் அன்னாச்சிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடலில் நல்ல பலம் கூடும். உடல் மேலும் பளபளப்பாகும். அன்னாசிப்பழத்தை  அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலமாக, சிறுநீரகக் கற்கள் உடனே கரையும் வாய்ப்பு அதிகம்.

அன்னாசிப்பழச்சாறை ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் வீதம்  ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நன்கு குணமாகும். பழச்சாறை நன்கு உங்கள் தொண்டையில் படும்படி சிறிது நேரம் உங்கள் தொண்டையில் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி குணமாகும், தொண்டைப்புண் விரைவில் தீரும்.

குழந்தைகளுக்கு மருந்தாகும்:

அன்னாச்சிபழத்திற்கு மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. நமது உடலில் உள்ள தேவையற்ற பித்தத்தை முற்றிலும் நீக்கும் சக்தி உண்டு. உடலுக்கு மேலும்  அழகைத் கூட்டும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் மேலும் கண் நன்கு ஒளி பெறும், தெளிவடையும். குழந்தைகளுக்கு அடிக்கடி அண்ணாச்சி பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். மேலும், குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்பட முக்கிய பங்கு வகிக்கிறது அண்ணாச்சி.


அன்னாச்சி பழத்தின் இலையில் உள்ள பலன்கள்: 

அன்னாச்சி இலைச்சாறு வயிற்றின் பூச்சிகளை அளிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அன்னாச்சி இலைச்சாறு டன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.

ஜீரணசக்தி அதிகரிக்கும்:


அன்னாச்சிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாச்சிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும். பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரண சக்தி அதிகரிக்கும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு கிடைக்கிறது. இந்த பழத்தில் உள்ள குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பித்தக் கோளாறுகளை அன்னாச்சி பழம் விரைந்து குணமாக்குகிறது. அன்னாச்சியில் கொழுப்புச்சத்து குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாச்சியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.

புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. வைட்டமின் சி சத்தும் அன்னாச்சியில் அதிகம் உள்ளது.

அன்னாச்சி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.

மேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்குகிறது. இதனால் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.

இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.

அன்னாச்சி பழத்தின் குணங்கள் :

நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து வலிமை பெற செய்கிறது.

பித்தத்தை தணிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் அனைத்தையும் கொண்டு உள்ளது. தினம் சாப்பிட உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நம்மை பராமரிக்கும்.

ரத்த குறைபாடுகளால் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் அன்னாச்சி பழத்தில் இருக்கும் சத்துக்களை கொண்டு பூர்த்தி செய்யலாம் மற்றும் ரத்த அளவையும் அதிகரித்து அதனால் எந்த பாதிப்புகளும் வராமல் தற்காத்து கொள்ளும்.

சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை பாலுடன் சேர்த்து நன்கு ஊறிய பிறகு குடிக்க வேண்டும், இதனை தினம் வழக்க படுத்தி கொண்டு வர நோய்கள் நம்மை அணுகாது.


முடிவுரை! 

இத்தனை பயன்களைக் கொண்ட இந்த அன்னாச்சி பழத்தை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம்.  ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான அன்னாச்சி பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல் தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு  தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது. 

Comments