அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஆயுர்வேத மூலிகையான அஷ்வகந்தாவின் அற்புத மருத்துவ பயன்கள்!

அற்புத மூலிகையான அஷ்வகந்தா:-

நாம் இன்று பார்க்கப்போகும் அஷ்வகந்தா செடி பழமையானது மட்டுமல்லாமல் இது ஒரு அற்புதமான மூலிகையும் கூட.

நம்முடைய முன்னோர்கள் அப்போதே இதன் அருமை அறிந்து இந்த அஷ்வகந்தா செடியை ஆயுர்வேத மருத்துவ முறையில் பயன்படுத்தினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போதாவுது இதன் மகத்துவத்தை தெரிந்து கொள்ளாமல் நாம் விட்டு விடக்கூடாது என்பதற்காக தான் இந்த பதிவு.

அஷ்வகந்தா  நம்முடைய மனஅழுத்தையும் குறைக்கும். இதில் இயற்கையாகவே நினைவு திறனை நன்கு அதிகரிக்கும் பண்பு உள்ளது. இதனால் நாம் நம் வீட்டிலே வளர்ப்பது நல்லது. இந்த ஆயுர்வேத மூலிகையில் அளவற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.


என்ன என்ன சத்துக்கள் உள்ளன:-

அஷ்வகந்தா மிக முக்கியமான மருந்து தாவரமாகும். இதன் உறுப்புகளில் இருந்து புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள முக்கிய சத்துக்களான வித்தாபெரின், வித்தானோன், வித்தனோலைடு, சோம்னிடோல், வித்தாசோமினி பெரின், நிகோடைன், டிரோபைன் போன்றவை காணப்படுகின்றன.

நினைவுதிறன் மேம்படுத்த உதவும் அஷ்வகந்தா:-

நினைவுதிறன் என்பது மனிதர்களுக்கு மிகவும் இன்றிமையாத ஒன்று. இந்த ஞாபகமறதி காரணமாக நாம் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை நம் அன்றாட வாழ்வில் ஏற்படுகிறது.

வெளியில் நாம் செல்லும் போது நமது வீட்டில் உள்ளவர்கள் இதை வாங்கி வாருங்கள், அதை வாங்கி வாருங்கள் என்று கூறுவார்கள். நாமும் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு கிளம்பி விடுவோம்.

ஆனால் திரும்ப வீட்டிற்கு வரும்போது அனைத்தையும் மறந்து விடுவோம். இதனால் வீட்டில் தேவையற்ற சண்டை தான்.

இதன் விளைவு நம்முடைய ஆற்றலும் வீணாகிறது. மேலும் நமக்கு தேவையற்ற மனஅழுத்தமும் ஏற்படுகிறது.

இதற்க்கு காரணம் நம்முடைய ஞாபகமறதி. இதன் காரணமாக நாம் தேவையற்ற பிரச்சனையில் சிக்கி கொள்வதாலும், மேலும் நமக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதனை சரி செய்வது மிகவும் எளிது. மிக நேர்த்தியான பயிற்சியை செய்வதன் மூலமாகவும், நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலமாகவும் இதனை சரி செய்யலாம். அத்தகைய வழியில் ஒன்று தான் இந்த அசுவகந்தி மூலிகை இதனை பற்றி இந்த பதிவில் சற்று தெளிவாக பார்க்கலாம்.

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் அஷ்வகந்தா:-

இந்த அஷ்வகந்தா வேர் நம்முடைய மனஅழுத்தத்தை குறைக்க முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள வித்தனாய்டு மற்றும் சோம்னிட்டால் ஆகிய இரு சத்துக்கள் நம்முடைய மனஅழுத்தத்தை குறைத்து நம்மை தேவையற்ற சிந்தனையில் இருந்து தருகிறது. எனவே இந்த அஸ்வகந்தா பவுடரை சாப்பிடுவது னமுடையா உடல் நலத்திற்கு நல்லது.அஷ்வகந்தா வேரில் உள்ள சத்துக்கள் நமது இதயத்திற்கு ஒரு நல்ல டானிக்காக செயல்படும்.

நரம்பு மண்டலம் மற்றும் ஆண்மை தன்மையை அதிகரிக்கும் அஷ்வகந்தா :-

அஷ்வகந்தா பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் நமக்கு நரம்பு மண்டலமும் நல்ல வலுவாக இருக்கும்.

மேலும் தற்போது உள்ள பலருக்கும் உள்ள பிரச்சனை ஆண்மை குறைவு. இதன் விளைவு குழந்தை ஈன்மை மற்றும் அதற்கான சிகிச்சை என தேவையற்ற மன மற்றும் உடல் சோர்வு. இவற்றை எல்லாம் தீர்க்கும் குறிப்பாக மலட்டு தன்மையும் நீக்கும் ஆற்றல் கொண்டது. இதற்க்கு தினமும் காலையில் இந்த அஷ்வகந்தா வேரின் பொடியை சிறிதளவு நெய் அலலது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நம்முடைய மலட்டு தன்மை நீங்கும்.மேலும் நம்முடைய நரம்பு மணடலத்திற்கும் நல்ல வலு சேர்க்கும்.

ஆண்களின் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்க உதவும் இயற்கை நமக்கு அளித்திருக்கும் வரப்பிரசாதம்தான் அஸ்வகந்தா மூலிகை. இதற்கு அமுக்கிரா கிழங்கு என்ற பெயரும் உண்டு.

பால் உணர்வு ஊக்குவி, தாய்ப்பால் சுரப்பு ஊக்குவி, மூளை செயல்பாட்டினைத் தூண்டுகிறது. நரம்பு மண்டலத்தினை வலுப்படுத்தும், விந்து எண்ணிக்கையினை அதிகரிக்கும். வேரின் பொடி சம அளவு நெய் மற்றும் தேனுடன் உட்கொண்டால் மலட்டுத்தன்மை அல்லது விந்து பலவீனத்தை நீக்கும்.

இது எங்கு கிடைக்கும் என்று நீங்கள் அலைய தேவை இல்லை அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் இது உள்ளது.

தேவை படும் நபர்கள் கீழே உள்ள லிங்க் மூலமாக வாங்கி கொள்ளலாம்.

நம்முடைய கொலட்ராலை குறைக்கவும் ,இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

நுரையீரல் ஆரோக்கியமாக இயங்க உதவும் அஷ்வகந்தா:-

இந்த அஷ்வகந்தா தான் மற்ற மூலிகையிலே இலைகள் கசப்பு தன்மை கொண்டவை. எனவே நமது குடலில் உள்ள தேவையற்ற கிருமிகள் அழித்து நம்முடைய வயிற்று பிரச்சனைக்கு ஒரு நல்ல மருந்தாக இதனை பயன்படுத்தலாம். மேலும் இதில் உள்ள இலைகள் மற்றும் வேர்கள் நமக்கு மருந்தாக பயன்படுகின்றன. இதில் உள்ள வேர்கள் நம்முடைய நுரையீரலுக்கு நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் நுரையீரல் தொடர்பான பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

இதன் இலைகள், வேர், கனி மற்றும் விதைகள் மருத்துவப் பயன் கொண்டவை. இலைகள் கசப்பானவை, வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிரானவை. காய்ச்சல் போக்குவி, வேர் மற்றும் இலைகள் இணைந்து நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. கசக்கிய இலைகளும் அரைத்த வேரும் மேல்பூச்சாக சொறி, வலியுடைய வீக்கங்கள், மற்றும் புண்கள் மீது பூசப்படுகிறது.

அசுவகந்தாவின் வேர் வலுவேற்றுவியாக செயல்படுகிறது. இது இருமல், விக்கல், மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்த வல்லது. ஞாபக சக்தியினை ஊக்குவித்து மறதியை போக்கும். இதன் உறுப்புகளில் உள்ள மருத்துவ குணங்கள் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது நம்முடைய கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வை மேம்படவும் உதவுகிறது.

காயங்களுக்கு மருந்தாகும் அஷ்வகந்தா:-

அசுவகந்தாவின் இலைகளும், வேர்களும் நமக்கு பல விதங்களில் நமக்கு மருந்தாக உதவுகிறது.

குறிப்பாக இதன் இலைகளை நன்கு அரைத்து அந்த சாறை நம்முடைய காயங்களின் மேல் தடவினால் நமக்கு விரைவில் குணமாகும் வாய்ப்பு அதிகம். இதனுடைய வேர்களை அரைத்து அந்த சாறை நம்முடைய வீக்கங்கள் மேல் தடவினால் நமக்கு வீக்கம் விரைவில் கரையும். மேலும் இதனை நம்முடைய சருமத்தில் உள்ள கட்டிகளையும் ஆள்பிடிக்க வல்லது. எனவே இந்த அஸ்வகந்தா பவுடரை நாம் தினமும் சிறிது எடுத்து கொள்வது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

மூட்டுவலி குணமாக உதவும் அஷ்வகந்தா:-



மூப்பு பலவீனத்தை போக்கும். முதுகுவலி மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது.அவர்களுக்கு இந்த அஷ்வகந்தா மிக சிறப்பான மருந்தாக இருக்கும். இந்த அசுவகந்தி பொடியுடன் பால் அல்லது நெய் கலந்து சாப்பிட வேண்டும். அல்லது இதன் கஷாயத்துடன் நெய் அல்லது பால் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, அதன் பின் அதனை குடித்துவர நம்முடைய மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.

நம்முடைய நினைவுதான் நம்முடைய மூளை சம்மந்தப்பட்ட ஒன்று என்பதால் நாம் அதில் தேவையற்ற மருந்துகளை சாப்பிட்டு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இயற்கை மருத்துவமே என்றும் நமக்கு பக்க விளைவுகள் இல்லாமல் நம்முடைய பிரச்னையை சரி செய்ய உதவுகிறது.

நமது நாட்டு மருந்து சித்த மருத்துவ கடைகளில் அஸ்வகந்தா லேகியம் அல்லது பவுடராகவும் கிடைக்கும்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான மருத்துவ செய்திகளை தெரிந்து கொள்ள மேலே உள்ள Subscribe பட்டன்- க்ளிக் செய்யவும்.

முடிவுரை:-

அளவுடன் அஷ்வகந்தா பயன்படுத்தி வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த அஷ்வகந்தா பயன்படுத்திநமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து,நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம்ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான , அஷ்வகந்தா பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.
மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லது தானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.

குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள்நோயின்றி  வாழவும்,வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த்டிப்ஸ் 360- பொறுப்பாகாது.



Comments