தேன் -
இதில் மறைந்துள்ள அற்புத பலன்கள்!
இயற்கையின்
வரப்பிரசாதம் என்றல், அது தேன்
தான். மலர்களின் கருவறையில் உற்பத்தி ஆகின்ற தேன், தேனீக்களால்
சேகரிக்கப்பட்டு மனிதர்களின் உணவுப்பொருலாக மாறுகிறது. பூச்சிகளால் தயார் செய்யப்பட்டு மனிதனால்
உட்கொள்ளப்படும் ஒரே உணவுப் பொருளும்
இந்த தேன் மட்டும் தான்.
உலகின்
மிகப் பழைமையான உணவுகளில் ஒன்று தான் தேன்.
காயங்களை ஆற்றவும் பழங்காலத்தில் தேன் பயன்படுத்தப்பட்டது. சுமார்
20-ஆம் நூற்றாண்டில் ஆன்டிபயாடிக் மருந்துகள் வரத்தொடங்கியவுடன் காயங்களை ஆற்ற, தேனின் பயன்பாடும்
மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது!
என்ன என்ன வைட்டமின்கள் உள்ளது தேனில்:-
தேனில் அதிக அளவு வைட்டமின்கள் கலந்துள்ளது. முக்கியமாக வைட்டமின் பி1, பி2, சி,பி3 போன்ற வைட்டமின்களும், தாமிரம்,அயோடின் போன்ற சத்துக்களும் உள்ளது. இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்(honey benefits in tamil). மேலும் இதில் ப்ருக்டோஸ்,க்ளுகோஸ், மற்றும் மெக்னிசியம் கலந்துள்ளது. இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும்.
ஃப்ரக்டோஸ்
மற்றும் க்ளுகோஸ் போன்ற சத்துக்கள் தேனில்
அதிகம் உள்ளது. குறிப்பாக தேனில்
கொழுப்புச் சத்து சிறிதும் இல்லை
என்பது கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
நாம் சிறுவயது காலத்தில் தேன் இருக்கும் பாத்திரத்தை
யாருக்கும் தெரியாமல் எடுத்து ருசித்தவர்கள் கூட,
தற்காலத்தில் வளர்ந்த பிறகு தேனை
மறந்து விடுகிறார்கள். அது ஏதோ மருந்துப்
பொருள் என்றே பலரும் இன்றளவும்
எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், தேன் ஒரு
மகத்தான உணவு என்பது தான்
அனைவரும் அறிய வேண்டிய உண்மை.
நம் அனைவருக்குமே தேனை மிகவும் பிடிக்கும்.
முக்கியமாக நாட்டு தேன் கிடைப்பது
மிகவும் கஷ்டம். நாட்டு தேன்
தூய்மையாக இருக்கும் என நாம் அனைவருமே
அதனை விரும்புவது தான் வழக்கம்(honey benefits in tamil).
தேன் நம் அனைவருக்கும்
பிடித்த சுவை மிகுந்த ஒரு
பொருளாக இருப்பது தெரிந்த ஒன்று தான்.ஆனால் அதில் உள்ள
மருத்துவ குணங்கள் நம் அனைவருக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. தேன் இயற்கையாவே நம்முடைய
வயிற்றுக்கு சிறந்த நண்பனாக இருக்கும்.
இதற்க்கு காரணம் வயிறு சம்மந்தமான
அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த தேன் நல்ல
நிவாரணமாக்க இருக்கும்.
ஆகவே தேனின் அருமை மற்றும்
அதன் அற்புத மருத்துவ குணங்களை
இக்கட்டுரையின் மூலம் விளக்க உள்ளேன்.
அப்படி என்னென்ன அற்புதங்கள் மறைந்துள்ளன இந்த தேனில்...! தெரிந்துகொள்ள
தொடர்ந்து படியுங்கள் முடிவில் ஆச்சிரியம் காத்துள்ளது.
தேனில் மறைந்து இருக்கும் அற்புத மருத்துவ பலன்கள்:-
மனித ரத்தத்திற்கு மிக நெருக்கமான தேன்:-
இலக்கியங்களில்
எப்போதும் திகட்டாத உவமையாய் அமைவது "தேன்" தான். மருத்துவத்திலும் அதற்கு
மகத்தான ஒரு இடம் உண்டு.
பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகளிலேயே மனித ரத்தத்துக்கு மிக
நெருக்கமான ஒரே உணவுப் பொருள்,
என்றால் அது தேன்தான். ரசாயனத்
தன்மையில் சிறிதளவு மாற்றம் செய்தாலே அது
மனித ரத்தத்தின் தன்மையைப் பெற்றுவிடும்.
உடல் வலுப்பெற உதவும் தேன்:-
தினமும்
ஒரு அவுன்ஸ் தேன் பருகினாலே,
பெரிய அளவில் வித்தியாசத்தை நமது
உடலில் ஏற்படுத்தும் ஆற்றல் தேனிற்கு உண்டு.
தினமும் தேன் சாப்பிட்டால் ஆச்சர்யப்படும்
அளவுக்கு உங்கள் சக்திநிலை உயரும்.
தினமும் ஒரு அவுன்ஸ் தேன்
பருகினாலே, பெரிய அளவில் வித்தியாசத்தை
ஏற்படுத்தும். குறிப்பாய் அதிக வேலைப்பளு உள்ள
நாளில் தேனைப் பருகிப்பாருங்கள். வித்தியாசத்தை
நீங்களே உணர்வீர்கள். கடுமையாய் உழைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற
உணவு தேன் தான்.
தேன், காலகாலமாக மனிதகுலத்தை மகிழ்வுற வைக்கிற இயற்கைக் கொடை.
ஏறத்தாழ 2700 வருடங்களாக பல நோய்களுக்கு அது
அருமருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்காலத்திலிருந்தே தேன் சேகரித்தல் இருந்திருக்கிறது.
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தேன் வேட்டை துவங்கியிருக்கலாம்
என்கிறார் ஆராய்ச்சியாளர் வில்சன்.
கண்பார்வை தெளிவு பெற உதவும் தேன்:-
இன்றைய
காலகட்டத்தில் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்
முன் அனைவரும் வேலை செய்வதால் நமக்கு
கண் பார்வை குறையும் அபாயம்
ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. பலருக்கு
கண்பார்வை குறைபாடும் இருக்கிறது. இதனை சரி செய்ய
தினமும் கேரட் ஜூசுடன் சிறிது
தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் நமக்கு கண்பார்வை சீராக
வாய்ப்புள்ளது.
ஹீமோகுளோபின்
அளவை அதிகரிக்கச் செய்ய உதவும் தேன்:-
நமது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவை தேன் அதிகரிக்கச்
செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வது
மிக மிக அவசியமான ஆரோக்கியம்.
உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவைப்
பொறுத்துத்தான் உங்கள் திறன் உள்ளது.
ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் குறைந்தால், செயல்திறனும் குறையும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்தால், சுவாசம்கூட
சீராகிவிடும்.
உடல் எடை குறைய உதவும் தேன்(Weight Loss):-
நம்மில்
பலருக்கு உள்ள பொதுவான பிரச்சனைகளில்
ஒன்று தான் இந்த அதிக
உடல் எடை மற்றும் தொப்பை.
அதிகமான எடையை குறைக்க நாம்
அனைவரும் பல செயற்கையான வழிமுறைகளை
பின்பற்றி வருகிறோம். அனால் எதிர்பார்த்த பலன்
கிடைத்திருக்காது (honey
benefits in tamil).
எடையை
குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேனை
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள
கொலுப்புகளை எரித்து உடல் எடையை
சீராக வைத்து கொள்ள தேன்
உதவும். தினமும் தேன் பருகினால்
உங்கள் செயல் திறன் முன்னெப்போதையும்விட
உற்சாகமாக இருப்பதை உணர்வீர்கள்.
வெந்நீரில்
கலந்து தேனைப் பருகினால், உடலில்
கொழுப்புச் சத்து கரையும், குளிர்
நீரில் தேனைக் கலந்து பருகினால்,
உடலில் கொழுப்புச் சத்து கூடும் என்றும்
நம்பிக்கை உள்ளது.
பெண்களுக்கு
ஏற்ற அற்புதம் தேன்:-
தேன் எல்லோருக்குமே ஏற்ற உணவு என்றாலும்
பெண்களுக்கு மிகவும் ஏற்றது. ஆய்வின்படி
70% இந்தியப் பெண்கள் பல காரணங்களால்
ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு தேன் அற்புதமான மருந்து.
தினமும் தேன் அருந்துங்கள்.
குழந்தைக்கு
ஏற்றது தேன்:-
குழந்தைகளுக்குத்
தினமும் தேன் கொடுத்து வளரச்
செய்யுங்கள். அது அவர்கள் வருங்காலத்தை
இனிக்கச் செய்யும்.
இருமலுக்கு நல்ல மருத்துவம் தேன் தான்:-
சரியான
அளவு தேனுடன் இஞ்சி சாறு
கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கு
தீராத சளி, மற்றும் இருமல்
நீங்கும். தினமும் சிறிதளவு தேனுடன்
இந்த இஞ்சியை சேர்த்து சாப்பிட்டு
வர மார்புசளி பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.
ஆஸ்துமா
குணமாக உதவும் தேன்:-
ஆஸ்துமா
உள்ளவர்களுக்கு தேன் மிக உகந்தது.
அது உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை வழங்குகிறது.
வெந்நீரில் தேனையும் மிளகையும் கலந்து பருகினால், ஆஸ்துமா
பாதிப்பைச் சுலபமாகத் தள்ளிப் போடலாம். தொடர்ந்து
இப்படிப் பருகுவதன் மூலம் முழுமையாக ஆஸ்துமாவிலிருந்து
விடுபடவும் வாய்ப்புண்டு.
தீக்காயம் குணமாக உதவும் தேன்:-
தேனில்
அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள்
உள்ளதால் அது நமக்கு பாக்டீரியாவை
எதிர்த்து போராட உதவும். மேலும்
நுண்ணுயிர்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது. எனவே நம் உடலில்
ஏற்படும் காயங்களுக்கு சிறந்த நிவாரணம் இருக்கும்(honey
benefits in Tamil). முக்கியமாக
நம்முடைய உடலில் ஏற்படும் சிராய்ப்புகள்,
தீக்காயங்களை நீக்கவும் உதவுகிறது.
இரத்த கொதிப்பு குணமாக உதவும் தேன்:-
ஒரு தேக்கரண்டி பூண்டு
சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன்
கலந்து சாப்பிட்டு வந்தால் நம் இரத்த
கொதிப்பு சீராகும்(honey benefits in
tamil).எனவே தினமும் இதனை காலை
மாலை என குடித்து வருவது
நம் உடலுக்கு நல்லது.
சரும பிரச்சனைகள் முற்றிலும் நீங்க:-
தினமும்
தேனி பாலில் கலந்து சாப்பிட்டு
வந்தால் நம் சருமத்தில் ஏற்படும்
முதுமை தோற்றத்தை நீக்கி இளமை தோற்றத்துடன்
வைத்து கொள்ள உதவும். தேனில்
உள்ள பண்புகள் நம்முடைய சருமத்திற்கு மிகவும் நன்மை தரும்.
நம்முடைய சரும சுறுக்கம் நீங்க
இந்த தேன் உதவுகிறது. தேன்
சாப்பிடுவதால் நம்முடைய சருமத்தில் உள்ள பருக்கள் மறைவதோடு
சருமம் ஈரப்பதத்துடன் இருக்கவும் உதவுகிறது(honey benefits in
tamil). தேனில் பூஞ்சை எதிர்ப்பு சக்தி
உள்ளது.இதனால்சருமத்தில் ஏற்படும் படை, சிரங்கு பிரச்சைக்கு
நல்ல நிவாரணமாக இருக்கும். தேனில் அதிக அளவு
ஆக்சிஜினேட்டர்கள் உள்ளது. இவை நம்
சருமத்தை புரா ஊதா கதிர்களிடம்
இருந்து பாதுகாக்கும்.
தேனை பயன்படுத்தும்போது தவிர்க்க வேண்டிய நடவடிக்கை என்ன
என்ன?
தேனை அடுப்பில் வைத்து சமைக்கக் கூடாது.
அப்படிச் செய்தால் அது விஷத்தன்மை பெற்றுவிடும்.
சிலர் சமைக்கவும் செய்கிறார்கள்.
பேக்கரித்
தொழிலில் இது மிக அதிகம்.
அது உடல் நலனிற்கு நல்லதல்ல.
தாகத்தைத்
தணிப்பதிலும் தேனின் பங்கு உண்டு.
சிறிதளவு குளிர்ந்த நீரில் தேனைக் கலந்து
குடித்தால் உடனே தாகம் தணியும்.
வெதுவெதுப்பான நீரில் மட்டுமே தேனைக்
கலந்து பருகலாம். கொதிக்கும் நீரில் கலப்பது தவறு!
தேன் விற்கிற சிலர் அதில்
சர்க்கரைப் பாகைக் கலந்து விற்றுவிடுகிறார்கள்.
அப்படியிருந்தால், அந்த பாட்டிலை 2 வாரத்துக்கு
ஒரே இடத்தில் வைத்துவிடுங்கள். பாகு, பாட்டிலின் அடியில்
தங்கிவிடும். மேலே உள்ள தேனை
பயன்படுத்திக்கொள்ளலாம். தேன் தீர்ந்தவுடன் பாகையும்
பயன்படுத்திக்கொள்ளலாம். சர்க்கரைப் பாகு ஆரோக்கியத்துக்குக் கெடுதல்
தருவதல்ல. ஆனால், தேன் என்று
சொல்லி உங்களை ஏமாற்றிவிட்டார்கள், அவ்வளவுதான்!
என்ன என்ன நன்மைகள் தேனில்
:-
1. தேனை தினமும் குடித்து
வந்தால் அது நமக்கு நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
2. இதில் உள்ள வைட்டமின்கள்
நம் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
3. காலை மாலை என
தேனை குடித்து வந்தால் நம் உடல்
சோர்வு நீங்கும்.
4. தினமும் தேன் குடிப்பதால்
நம் சுவாச குழாயில் உள்ள
நோய் தொற்றுக்களை சரி செய்யும்.
மேலும்
இது போன்ற ஆரோக்கியமான இயற்கை
முறை மருத்துவ குறிப்புகளை சரி செய்ய மேலே உள்ள Subscribe பட்டன்-ஐ
க்ளிக் செய்யவும்.
முடிவுரை:-
அளவுடன் தேனை உண்டு வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த தேனை நமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான தேனை, பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.
மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லது தானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம். இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
Comments
Post a Comment