அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பாதம் பருப்பு கேள்வி பட்டு இருப்போம்! பாதம் எண்ணெயால் இவ்வளவு நன்மைகளா?(Health Benefits and Uses of Almond Oil in Tamil)

பாதாம் எண்ணெய்யில் இவ்வளவு  மருத்துவ குணங்களா என வியக்கும் பதிவு(Health Benefits and Uses of Almond Oil):-

நம் அனைவருக்கும் பாதாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் நன்கு தெரிந்து இருக்கும். ஆனால் பாதாம் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாதாம் எண்ணெய் கூந்தலின் ஆரோக்கியத்தில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. குறிப்பாக பாதாம் எண்ணெய்யில் தான் நமக்கு தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் இது நம்முடைய சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஒரு நல்ல பலனை தருகிறது.


பாதாம் எண்ணெயால் நாம் பெரும் பலன்கள்(Health Benefits and Uses of Almond Oil):-

மென்மையான பட்டு போன்ற கூந்தலுடன் அடர்த்தி அதிகமான அலைபாயும் பொலிவான கூந்தலையும் பெற முடியும். எனவே இதனை நாம் நம்முடைய உணவில் சேர்த்து கொண்டு இதனுடைய மருத்துவ குணங்களை கண்டிப்பாக பெற வேண்டும்.

இந்த ஓரே பொருலில் தான் அனைத்து நலன்களையும் அள்ளி தருகிறது. குறிப்பாக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இந்த எண்ணையில் அதிகம்  உள்ளது. இது கூந்தல் பாதிப்பில் இருந்து அதிகம் பாதுகாக்கிறது.


இயற்கை மருத்துவதை வலியுறுத்தும் நமது தமிழ் ஹெல்த் டிப்ஸ்360 :-

இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகமாக கடைகளில் விற்கும் பொருட்களை தான் நம்பி வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தேவையற்ற பக்க விளைவுகள் தான் அதிகம் வருகிறது.

முக்கியமாக பெண்கள் அவர்களுடைய அழகை மேம்படுத்த வாங்கும் விலை உயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களால் தற்காலிக பொழிவேயே பெற முடியுமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது, மேலும் சிறிது காலம் கழித்து பக்க விளைவுகள் தான் அதிகம் வரும். எனவே தான் நம்முடைய தமிழ் ஹெல்த் டிப்ஸ்360 இயறக்கை முறை மருத்துவத்தை தான் பயன்படுத்த பல வழிமுறைகளை மக்கள் நலன் கருதி வழங்கி வருகிறோம். நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் தேவையான அனைத்து யூட் சத்துக்களும் இந்த பாதாம் எண்ணெயில் உள்ளது. அதன் பயன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊட்டசத்துக்கள் நிறைந்த பாதாம் எண்ணெய்(Health Benefits and Uses of Almond Oil):-

பாதாம் எண்ணெயில் அதிக அளவு விட்டமின் , டி, , மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இவை நம்முடைய கூந்தல் வளர்ச்சிக்கும், நம்முடைய சரும பிரச்சனைக்கும் சிறந்த நிவாரணமாக உள்ளது.

பாதாம் எண்ணெய் நீண்ட ஆரோக்கியமான கூந்தல் கிடைக்க உதவுகிறது. இது கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது. அதனால் தான் இதை இன்றளவும் அதிக  கூந்தல் பராமரிக்கும்  சாதனங்களில் உபாயோகப்படுத்த படுகிறது. எனவே இந்த பாதாம் எண்ணெயை தினமும் நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

கூந்தல் வளர்ச்சி உதவும் பாதாம் எண்ணெய்:-

நம்முடைய முடி அடர்த்தியாக வளர வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாதாம் எண்ணெய்க்கு தான். இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் நம்முடைய முடிக்கு தேவையான ஊட்ட சத்தை தருகிறது. இதற்கு நாம் தூங்கும் முன் இரவில் பாதாம் எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் நம் தலை முடி நன்றாக அடர்த்தியாக வளரும்.

மேலும் பாதாம் எண்ணெய் கூந்தலின் நுனியில் ஏற்படும் வெடிப்பையும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. இதற்கு ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் இவற்றை சம அளவு எடுத்து கொள்ளுங்கள். இதை மூன்று வாரங்கள் தேய்த்து வந்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும்.

பொடுகு தொல்லை இனி அறவே இல்லை(Health Benefits and Uses of Almond Oil):-

நம்முடைய தலையில் உள்ள இறந்த செல்கள் படிவதையே நாம் பொடுகு என அழைக்கின்றோம்.

பாதாம் எண்ணெய் நம்முடைய பொடுகை நீக்கும் சக்தி கொண்டது.

பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின்கள் நம்முடைய தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி நம்முடைய தலை முடி நன்றாக வளர உதவுகிறது.இதற்க்கு இந்த பாதாம் எண்ணெய்யை தலையில் தடவி 20 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் இதே போல் செய்து வந்தால் நம்முடைய பொடுகு தொல்லை நீங்கும்.

பாதாம் எண்ணெயுடன் மசித்த நெல்லிக்காய் இவ்விரண்டையும் கலந்து தலையில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு சாம்பு போட்டு நன்கு அலசி விடுங்கள். இந்த முறை உங்கள் தலையில் உள்ள பொடுகை நீக்கி கூந்தலுக்கு ம் புதுப்பொலிவு தரும்.

வறண்ட சருமத்தை பொலிவாக மாற்ற  உதவும் பாதாம் எண்ணெய்:-

நம்முடைய சருமம் கோடை வெயிலின் காரணமாக வறண்டு காணபடும். இதனை நம்முடைய அழகு போவது போல் நமக்கு இருக்கும். இந்த பாதாம் எண்ணெய் கொண்டு நம்முடைய முகத்தில் மசாஜ் செய்வதால் நமக்கு வறண்ட சருமம் நீங்கி நமக்கு மென்மையான சருமத்தை பெறலாம். இதன் அடர்த்தி மிகவும் குறைவாக இருபதால் வறண்ட சருமமும் இதனை எளிதாக உறிஞ்சி கொள்ளும். எனவே நமக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.:-

நம்முடைய சருமம் கோடை வெயிலின் காரணமாக வறண்டு காணபடும். இதனை நம்முடைய அழகு போவது போல் நமக்கு இருக்கும். இந்த பாதாம் எண்ணெய் கொண்டு நம்முடைய முகத்தில் மசாஜ் செய்வதால் நமக்கு வறண்ட சருமம் நீங்கி நமக்கு மென்மையான சருமத்தை பெறலாம். இதன் அடர்த்தி மிகவும் குறைவாக இருபதால் வறண்ட சருமமும் இதனை எளிதாக உறிஞ்சி கொள்ளும். எனவே நமக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.

கூந்தல் வறட்சி முற்றிலும் தடுக்க உதவும் பாதாம் எண்ணெய்(Health Benefits and Uses of Almond Oil):-

நம்மில் பலருக்கு வறண்ட கூந்தல் மற்றும் கூந்தலில் நுனியில் வெடிப்பு ஏற்படும். இதனால் நம்முடைய கூந்தல் வளர்ச்சியானது தடைபடும். இதற்க்கு இந்த பாதாம் எண்ணெய் சிறந்த நிவாரணமாக இருக்கும்.

தினமும் சிறிது நேரம் நம்முடைய தலையில் பாதாம் எண்ணையை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் குளித்து வந்தால் நம்முடைய கூந்தலில் உள்ள வெடிப்புகள் மற்றும் வறட்சி தன்மை நீங்கும். மேலும் இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்முடைய கூந்தல் நன்கு பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.

தலையில் ஏற்படும் அழற்சியை கட்டுப்படுத்தும் பாதாம் எண்ணைய்(Health Benefits and Uses of Almond Oil):-

பாதாம் எண்ணெய் தலையில் ஏற்படும் அழற்சியை கெமிக்கல் பொருட்கள்போக்குகிறது. சுற்றுச்சூழல் மாசுக்கள், வெயில், தூசி போன்றவற்றால் ஏற்படும் தொற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த தொற்றுகளை போக்க நீங்கள் வழக்கமாக பாதாம் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் போதும்.

வறண்ட கூந்தலை நன்றாக சீப்பை கொண்டு இழுத்து கொள்ளுங்கள். இப்பொழுது பாதாம் எண்ணெய்யை இரு உள்ளங்கைகளில் நன்கு எடுத்து நன்றாக தேய்த்து பின் தலையில் தேய்க்கவும்எண்ணெய்யை கூந்தலின் நுனியிலிருந்து வேர்க்கால்கள் வரை தடவவும்இப்பொழுது  வறண்ட நுனி முடிகள் இப்பொழுது போஷாக்கை பெற்று நன்றாக காட்சியளிக்கும். குறிப்பாக இந்த எண்ணெய்யில் உள்ள கொழுப்பு நிறைந்த அமிலங்கள்  நமது கூந்தலுக்கு நல்ல ஈரப்பதத்தை தரும். எனவே இது வறண்ட கூந்தலை சரியாக்கி நல்ல பொலிவான தன்மையை கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

சரும பிரச்சனைகள் நீங்க உதவும் (Health Benefits and Uses of Almond Oil):-

இன்றைய மாசுள்ள சுற்றுசூழலில் நம்முடைய சருமம் அதிக அளவில் பாதிக்க படுகிறது, இதற்க்கு நாம் கடைகளில் விற்கும் காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு தேவையிற்ற பக்க விளைவுகள் தான் வரும்.எனவே நாம் இந்த பாதாம் எண்ணையை பயன்படுத்துவதால் நமக்கு இடனாக சரும பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

உதட்டின் மென்மை தன்மையை காக்க உதவும் பாதாம் எண்ணெய்(உதடு வெடிப்பு):-

கோடை காலங்களில் நம்முடை உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது வழக்கம். இதனை நம்முடைய உதட்டின் மென்மை தன்மை போய்விடும்.

குறிப்பாக பெண்கள் அதிகம் இதன் மூலம் பாதிக்க படுவார்கள் .இதற்கு ஒரே தீர்வு இந்த பாதாம் எண்ணெய் தான். சிறிது பாதாம் எண்ணெயில் 2 சொட்டு தேன் கலந்து அந்த கலவையை நம்முடைய உதட்டில் தடவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால் நம்முடைய உதட்டில் உள்ள வெடிப்புகள் நீங்கும்.

மேலும் இது நம்முடைய முகத்தில் உள்ள கருவளையம் மற்றும் முகப்பருக்கள் நீங்கவும் அதிகம் உதவுகிறது. தினமும் இந்த எண்ணெயை நாம் முகத்தில் நன்கு தடவி மசாஜ் செய்து வந்தால் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை செய்திகளை தெரிந்துகொள்ள    உள்ள  தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe பட்டன்- க்ளிக் செய்யவும்.

முடிவுரை:-

அளவுடன் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தி வளமுடனும்நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த  பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தி  நமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து,நல்ல ஆரோக்கியமும்பலனும் பெறுவோம்.  ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும்பரிச்சயமான , பாதாம் எண்ணெய்யை பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.

மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லது தானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.  இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ளமறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.

குறிப்பு:இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள்கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும்,வருமுன் காக்கவும்இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமேஇதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு   தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360பொறுப்பாகாது.



Comments