அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

கருஞ்சீரகத்தின் அற்புத மருத்துவ பயன்கள்(Karunjeeragam For Hair in Tamil)

கருஞ்சீரகத்தின் அற்புத மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)


ன்றைய நவீன காலகட்டத்தில் நம்மில் பலருக்கு இருக்கும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று தான் இந்த முடி உதிர்தல்.

இளம் வயதிலியே நமக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு நம்மை சொட்டை தலையாக ஆக்குகிறது. இதனால் பலரும் மனரீதியாக பெரிதும் பாதிக்க படுகின்றனர். இதற்கு ஒரு சிறந்த நிவாரண பொருள் தான் இந்த கருஞ்சீரகம்(Karunjeeragam For Hair In Tamil).

இது நம்முடைய பண்டைய காலத்தில் கூந்தல் வளர்வதற்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருள்களில் ஒன்று. ஆனால் நம்மில் பலருக்கு இந்த கருஞ்சீரகத்தின் மகிமை தெரியாது.

மிக பழமையான ஆயுர்வேத குறிப்புகளில் , கூந்தல் வளர்ச்சியில் கருஞ்சீரகம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். நைஜெல்லோன் மற்றும் தைமோ க்யுனோன் போன்ற முக்கிய அற்புதமான காரணிகள் கருஞ் சீரகத்தில் அதிகம் உள்ளது. இவை முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பொடுகு, வறட்சி, கிருமித் தொற்று , இன்றைய கால உணவுமுறையால் பலவீனமான முடிக்கற்றைகள் போன்ற பலப்பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் கருஞ்சீரகத்தில் உள்ளது.



வயது ஆன பிறகு இயற்கையாக முடி கொட்டுவது இயல்பு ஆனால் தற்போது 30-35 வயது தாண்டுவதற்குள் முடி அதிகம் கொட்டி  வழுக்கை தலையாக மாறும் அபாயம் தற்போது அதிக அளவில் உள்ளது. வழுக்கை தலையுளும் முடி வளர்ச் செய்யும். நரை முடியை முற்றிலும் தடுக்கும். இவ்வளவு நன்மைகள் கொண்ட கருஞ்சீரகத்தை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

தலை முடி நான்றாக வளர இயற்கை முறை மருத்துவம்:-





தலை முடி நான்றாக வளர நாம் கடைகளில் விற்க்கும் வேதி பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனை  பயன்படுத்துவதால் தான் நமக்கு முடி இன்னும் வளராமல் போகிறது.அல்லது முடி உதிர்வதை மட்டும் தான் அது தடுக்குமே தவிர முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர்வதில்லை என்பது தான் உண்மை.

நாம் நம்முடைய இயற்கை முறை மருத்துவத்தை பயன்படுத்துவதால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் நமக்கு முடி வளர்வதையும் அதிகரிக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்திற்கு (Karunjeeragam for Healthy Hair Growth in tamil) உண்டு.

வயிற்று கோளாறுகள் போக்கும் கருஞ்சீரகம்(Karunjeeragam):-

கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் ஆற்றல் உண்டு. வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதர ஜீரண கோளாறுகள் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதோடு மட்டுமில்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுகளையும் போக்கும் ஆற்றல் கொண்டது கருஞ்சீரகம்.

தோல் குறைபாடுகள் போக்கும் கருஞ்சீரகம்(Karunjeeragam):-

கருஞ்சீரக பொடியை தினமும் குளிக்கும் போது உடலில் தேய்த்து குளிப்பதால் சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் நீங்கும். இதன் மூலம் தோலில் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும் ஆற்றல் உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கருஞ்சீரகம்(Karunjeeragam):-

கருஞ்சீரகத்தில் இருக்கும் இயற்கை ரசாயனம் சிறந்த நோய்யெதிர்ப்பு திறன் கொண்டது. மேலும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்டக்கொழுப்புகளை கரைத்து நமது உடல் செரிமானத்தை சீர் படுத்தி நமது உடல் நலத்தை பாதுகாக்கிறது.

சிறுநீரக கற்கள் நீக்கும் வல்லமை கொண்ட கருஞ்சீரகம்:- 

கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, அதனுடன் சிறிது தேனும் கலக்கி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைத்து, அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.

சுவாச நோய்கள் நீக்கும் ஆற்றல் கொண்ட கருஞ்சீரகம்:- 

ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள் கருஞ்சீரகத்தை பொடி செய்து, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 தலை முடி உதிர்வதை தடுக்க உதவும் கருஞ்சீரகம்:-

கருஞ்சீரக எண்ணெயை தேங்காய் எண்ணெயோடு குறைந்த தீயில் காய்ச்சி அதை ஆறவைத்து, வாரம் 3 நாட்கள் இந்த எண்ணெயை தலையில் அரைமணி நேரம் ஊறவிட்டு தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் வழி முறைகள்:-(Karunjeeragam Oil):-

கருஞ்சீரகத்தின் நன்மை பற்றி தெரிந்தாலும் அதனை எவ்வாறு தயாரிப்பது மற்றும் எவ்வாறு உபயோகிப்பது என்பதை பற்றி பலருக்கும் தெரியாது. அதனை பற்றி இப்போது பார்க்கலாம்.

கருஞ்சீரக எண்ணையை தயாரிக்க நாம் முதலில் கருஞ்சீரகத்தை கொண்டு தயாரிக்க பட்ட எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும்

இந்த கருஞ்சீரக எண்ணையை நேரடியாக பயன்படுத்துவது மிகவும் நல்லது. நமக்கு முழுமையான பலன் கிடைக்கும். ஆனால் இந்த எண்ணெய் நேரடியாக கிடைக்காத நேரத்தில் நாம் தேங்காய் எண்ணெயை எடுத்து அதில் கருஞ்சீரகத்தை போட்டு நன்றாகா கொதிக்க வைக்க வேண்டும்

பின் வடிகட்டி ஆரிய பின் நாம் அந்தா எண்ணையை பயன்படுத்த வேண்டும். ததேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நாம் நால்லெண்ணையையும் பயன்படுத்தலாம்.

நாம் தயாரித்த கருஞ்சீரக எண்ணையை பல வழிகளில் உபாயகப்படுத்தலாம். அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தும் முறை -1:

இரவில் தூங்கும் முன் இந்த கருஞ்சீரக எண்ணெய் உடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முளை செய்தால் நம்முடைய பொடுகு பிரச்சனை நீங்கும். மேலு நம்முடைய கூந்தலும் நன்றாக வளரும்.

கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தும் முறை -2:

கருஞ்சீரக எண்ணெயுடன் சிறிதளவு தேன் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நம்முடைய தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டுமாம் பின் டர்க்கி துணியை கொண்டு நம்முடைய தலையில் கட்ட வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு பொடுகு மாற்று  இளநரை பிரச்சனை நீங்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தும் முறை -3:

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை சமஅளவு எடுத்து கொள்ள வேண்டும்.இதனை கலந்து மிதமாக சூடுபடுத்த வேண்டும். பின் ஸ்கால்ப்பில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும்.

கொசுறு இணைப்புகள்:- 

மேலும் பல நன்மைகள் நிறைந்த கருஞ்சீரகம்:-

கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்துவதால் நமக்கு இளநரை ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் இளநரை இருப்பவர்கள் இதனை உபயோகித்தால் இளநரை அனைத்தும் கருமையாக மாறும்.

இந்த கருஞ்சீரகத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் இருப்பதன் காரணமாக நம்முடைய தலை முடி உடைவதை தடுக்கிறது,

நம்முடைய தலை முடி வளர காரணமான ஸ்கல்ப்பை இது பாதிப்படையாமல் பார்த்து கொள்ளும். இதனால் நமக்கு முடி வளர்வது நன்கு அதிகமாகும்.


மேலும் இது போன்ற ஆரோக்கியமான இயற்கை முறை மருத்துவ செய்திகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Subscribe பட்டன்- க்ளிக் செய்யவும்.

முடிவுரை:-

அளவுடன் கருஞ்சீரகம் சேர்த்து வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த கருஞ்சீரகம் நமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம்ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான கருஞ்சீரகத்தின், பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.


மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லது தானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.  இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்து கொள்ளுங்கள்.

குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு   தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.

Comments