அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

ஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா?இதை படிங்கள் முதலில்!

லக்காய்(Elettaria Cardamomum) இந்திய உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மசாலா பொருளாகும்.
ஏலக்காய் தான் உலகிலே 3 வது விலையுயர்ந்த மசாலா பொருள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் உண்மை.  
ஏலக்காய் பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும் உலகளவில் இது டைமண்ட்க்கு(Diamond) நிகரானது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அவ்வளவு மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது ஏலக்காய். குங்குமப் பூ மற்றும் வெண்ணிலாவுக்கு அடுத்த படியாக இந்த ஏலக்காய் தான் விலையுயர்ந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசாலா பொருள் உலகளவில் மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் அமெரிக்காவில் உள்ள கோட் மாலா என்ற நகரத்தில் தான் ஏலக்காய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் இந்த ஏலக்காயின் பூர்விகம் நமது இந்திய கண்டம் என்பது தான் உண்மை. 

நாம் தினமும் குடிக்கும் காபி, டீ-யில் இந்த ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்தாலும் சும்மா காபி, டீ நன்கு வாசனையாகவும், நமது உடலுக்கு புத்துணர்ச்சியும் கொடுக்கும் மருத்துவ குணம் கொண்டது ஏலக்காய்.

மிக பழமையான மசாலா பொருள்:-    


மனிதன் நாகரீகம் தோன்றிய கணக்குப் படி பார்த்தால் ஏலக்காய் 4000 வருடங்களுக்கு முன்பு தோன்றியுள்ளது. இதன் படி பார்த்தால் பழைய எகிப்து, ரோமன் மற்றும் கிரீக் போன்ற காலங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஸ்கேன்டினேவியன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில் ஏலக்காயை நாம் வெறும் வாசனை பொருளாக பார்க்கப்படும் நிலையில், அதில் பல இயற்கை மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் கொட்டி கிடக்கின்றன. 


இரண்டு விதமான ஏலக்காய் வகைகள் உள்ளன:-

1. கருப்பு
2. பச்சை

கருப்பு:-

கருப்பு ஏலக்காய் இது வாசனைக்காக பயன்படுத்தாமல் திண்பன்டங்களில் பயன்படுகிறது. இது தான் கரம் மசாலா பொருட்களிலும் பயன்படுகிறது. நாம் வீடுகளில் கரி கொளம்பு மற்றும் கீர், பிரியாணி போன்ற உணவுகளில் வாசனை பொருளாக பயன்படுகிறது. பச்சை ஏலக்காய் விட கருப்பு ஏலக்காய் மிகவும் சிறந்தது.


பச்சை:-

பச்சை ஏலக்காய் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையான இயற்கை ஏலக்காயும் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் பலகாரங்களிலும் பயன்படுகிறது.

இதைத் தவிர இந்த இரண்டு ஏலக்காய்களும் மருத்துவ நன்மைகளையும் அள்ளித் தருகின்றன.

நாம் இப்பொழுது உங்களை ஆச்சரியமூட்டும் வகையில் ஏலக்காயின் மருத்துவ குணங்களை தொகுப்பாய் கீழ்கண்டவாறு காண்போம்:-



சர்க்கரை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது ஏலக்காய்(Elettaria Cardamomum):- 

ஏலக்காயில் உள்ள மாங்கனீஸ் சத்து டயாபெட்டீஸ் வாராமல் தடுக்கிறது. ஆனால் இதைப் பற்றிய ஆராய்ச்சி போய்க் கொண்டு தான் இருக்கிறது. இன்னும் முடிவு பண்ணவில்லை
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ஏலக்காயுக்கு உண்டு.



ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மிகவும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உண்டு.

ஏலக்காய் உங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ஏலக்காயை தினமும் எடுத்து கொள்ளும் போது நமது உடலில் லிப்பிட்டை அதிகரித்து இரத்தம் கட்டாமல் தடுக்கிறது. எனவே இது பக்க வாதத்தை தடுக்கிறது.

ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும் ஏலக்காய்:- 

ஏலக்காயில் விட்டமின் 'C' உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பைடோநியூட்ரியன்ட்ஸ் போன்றவை சருமத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சுருக்கம், சரும கோடுகள், வயதாகுவதை தடுக்கிறது.

சரும பிரச்சினைகளை சரி செய்யும் ஏலக்காய்:-

ஏலக்காய் பொடியை 1 டீ ஸ்பூன் தேனுடன் சேர்த்து முகத்திற்கு தொடர்ந்து மாஸ்க் போட்டு வந்தால் சரும நிறமாற்றம், கரும்புள்ளிகள், தழும்பு மற்றும் பருக்கள் போன்றவைகளும் சரியாகுகிறது.


மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் ஆற்றல் ஏலக்காயுக்கு உண்டு:-  

நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால் போதும் உங்கள் மன அழுத்தம் காணாமல் போய்விடும்.
வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது. உங்கள் பயணமும் இனிமையாக முடியும்.

சக்தி வாய்ந்த ஆண்மையை அதிகரிக்க உதவும் ஏலக்காய்(Elettaria Cardamomum):- 

ஏலக்காயில் உள்ள ஷைனோல் ஆற்றல் மிக்க நரம்புகளை தூண்டி ஆண்மையை அதிகரிக்கிறது.

வாய் துர்நாற்றம் போக்கும் ஏலக்காய்:-  

நமது வாயில் உள்ள கெட்ட கிருமிகளை போக்குவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெப்ட்ரோகோக்கஸ் மியூட்ன்ஸ் போன்ற பாக்டீயாக்களை அழிக்கிறது. 

உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கிறது. எனவே இது பல் இடுக்குகளில் படிந்த கரைகள், கிருமிகள் போன்றவற்றை அகற்றி வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. ஏலக்காய் வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. 

பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம். பலருக்கு இயல்பாக உள்ள வாய் துர்நாற்றம் போக்கும் ஆற்றல் ஏலக்காயுக்கு உண்டு. 

சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், வாய் புத்துணர்ச்சிக்கும் வழி வகுக்கும்.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஏலக்காய் (Elettaria Cardamomum):-


பச்சை ஏலக்காய் உங்கள் சுவாசத்தை சரியாக்குகிறது., மூச்சுத் திணறல், இருமல், மூச்சை குறைவாக இழுத்தல், ஆஸ்துமா அறிகுறிகள் போன்றவற்றை தடுக்கிறது.

பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிக பேர் ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவார்கள், அவர்களுக்கு ஏலக்காய் கஷாயம் பருகினால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

தொண்டைப் புண்களை சரி செய்யும் ஆற்றல் கொண்ட ஏலக்காய்:-
1 கிராம் ஏலக்காய் +1 கிராம் பட்டை +125 மில்லி கிராம் கருப்பு மிளகு +1 டேபிள் ஸ்பூன் தேன் = தொண்டை புண் நிவாரணி மருந்து. தொடர்ந்து இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று தடவை எடுத்து கொண்டால் போதும் இருமல், தொண்டை புண் குணமாகி விடும்.

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.

விக்கலை சற்று என்று நிறுத்தும் தன்மை கொண்ட ஏலக்காய்:- 

உங்களுக்கு நிறுத்த முடியாத தொடர்ச்சியான விக்கல்கள் ஏற்பட்டால் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால் போதும். உங்கள் விக்கல் பறந்து போய்விடும். ஏனெனில் இது விக்கல் உண்டாவதற்கான வால்வை ரிலாக்ஸ் செய்கிறது.


பசியின்மை பிரச்சினை உள்ளதா?அதனை தீர்க்க? 

பசியின்மை பிரச்சினை தான் பெரும்பாலான நோய்க்கு காரணமாக உள்ளது. புற்று நோய், அனோர்ஷியா போன்ற நோய்களுக்கு இது தான் காரணமாக உள்ளது.

எனவே இதை தடுக்க உங்கள் உணவுகளில் ஏலக்காய் சேர்த்து கொண்டாலே போதும்.

சீரண சக்தியை அதிகரிக்கும் ஏலக்காய் (Elettaria Cardamomum):-

அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி விரைவில் எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌அனைத்தும் சீராக இய‌ங்கு‌ம்.

ஏலக்காய் ஒரு மசாலா பொருளாக மட்டும் இல்லாமல் மூலிகை பொருளாகவும் பயன்படுகிறது. இது நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து பித்த நீரை அதிகரித்து சீரண சக்தியை அதிகரிக்கிறது. எதுக்களித்தல், வாய்வு தொல்லை போன்றவற்றை சரியாக்குகிறது.

முடிவுரை:-

அளவுடன் ஏலக்காய் உண்டு வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த ஏலக்காய் நமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம்.  ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான வெந்தயத்தின்பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். 
மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லது தானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.  இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல்  தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு   தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.

Comments