கொலஸ்ட்ரால் குறையும் வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும். உடல் சூடு குறையும் உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.
வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும். உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகப் பொடி கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள்,
வெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போக்குகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம் உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.
வெந்தயம் முகப் பொலிவை மெருகேற்றுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை வெந்தயம் கலந்த முகப்பூச்சுகள் நீக்குகின்றன. வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவ முகம் பளபளக்கும்.
வெந்தயத்தில் உள்ள முக்கிய வேதிப்பொருள் உங்களுக்கு இருதய நோய் வருவதை தடுக்கிறது. வெந்தயத்தில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தையும் இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில் குறைக்கிறது.
வெந்தயத்தை வறுத்து, அதனுடன் வறுத்த கோதுமையை சேர்த்து, டீ, காபிக்கு பதிலாகா தினமும் வெந்தய டீ அருந்தி வந்தால், உடல் வெப்பம் குறையும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம் (Fenugreek):-
கணையத்தில் இன்சுலின் என்கிற சுரப்பியில் கோளாறு ஏற்படுவதால் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. வெந்தயம் மற்றும் வெந்தய கீரைகளை அடிக்கடி உண்ண நீரழிவு ஏற்படாமல் தடுக்கும் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வெந்தயம் பெரிதும் உதவுகிறது. இயற்கையாகவே கரையத்தக்க நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால், சர்க்கரையை இரத்தம் உட்கொள்ளும் வீதம் குறையும். மேலும் வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால், இன்சுலின் உற்பத்தியை அது தூண்டிவிடும்.
வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.
தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
(இப்பகுதி ஆண்களுக்கு)...பகுதி ஆரம்பம்!
ஆண்களுக்கு பலன்களை அல்லி தரும் வெந்தயம்:-
ஆண்மையை அதிகரிக்க வெந்தயத்தின் பங்கு:-
டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்னும் ஹார்மோன் சுரப்பதை வெந்தயம் அதிகரிக்கிறது. பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அதிலும் ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, நீண்ட நேரம் உறவில் இன்பத்தை அனுபவிக்க உதவும். ஆண்களின் பிரச்சனைகளைப் போக்கும் ஆண்கள் சிலருக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருக்கும். இத்தகையவர்களால் உறவில் சிறப்பாக செயல்பட முடியாது. ஆகவே ஆண்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால், பிறப்புறுப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, பிரச்சனைகள் நீங்கும்.
ஆண்களுக்கான...பகுதி நிறைவு!
(இப்பகுதி பெண்களுக்கு)...பகுதி ஆரம்பம்!
பெண்களுக்கு பலன்களை அல்லி தரும் வெந்தயம்:-
மாதவிடாய் பிரச்சனைகள்:-
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் இந்த மாதவிடாய் இயற்கையானதே. ஆனால் சில பெண்களுக்கு மட்டும் இது வலி நிறைந்ததாக மாறி விடுகிறது. இப்படியான வலி நிறைந்த காலத்தில் இரவு நேரத்தில் சிறிது வெந்தயங்களை அரைத்து சாப்பிட்டு சிறிது நீரை அருந்திவர குணம் கிடைக்கும்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் வெந்தயம்(Fenugreek):-
புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு அந்த பெண்கள் வெந்தயத்தை தினமும் இருவேளை உணவுகளில் உட்கொண்டு வர தாய்ப்பால் நன்கு சுரக்கும். அந்த தாய்ப்பாலை அருந்தும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.
குறிப்பாக குழந்தை பெற்ற பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரப்பு அதிகரிக்கும்.
மார்பகத்தை பெரிதாக்க உதவும் வெந்தயம்:-
நிறைய பெண்களுக்கு மார்பகத்தின் அளவை பெரிதாக்க ஆசை இருக்கும். அத்தகைய பெண்கள் நீங்களாக இருந்தால், வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் இயற்கையாக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.
பெண்களுக்கான...பகுதி நிறைவு!
முடி உதிர்வுக்கு தீர்வு தரும் வெந்தயம்:-
தலைமுடி உச்சந்தலையை வெளிப்புற சீதோஷணங்களிலிருந்து காக்கிறது. ஆனால் இன்று பலருக்கும் தலைமுடி உதிர்வது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசுந்தயிரில் கலந்து அரைத்து, தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரத்திற்கு பின்பு தலைக்கு ஊற்றிக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கும். முடி மென்மையாகும்.
வெந்தயத்தை தனியாக ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நிற்கும் எனபதும் குறிப்பிடத்தக்கது.
பொடுகு தொல்லை இனி இல்லை:-
வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து முடியின் அடிக்கால்களில் தடவி அரை மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வதும் நிற்கும். தலைமுடி நன்கு அடர்ந்து வளரும்.
இதய ஆரோக்கியம் மேம்பட உதவும் வெந்தயம்:-
வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுத்து, பிற்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.
இரத்த ஓட்டம்:-
வெந்தயம் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும். வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட்டு வர குருதி பெருகும்.
வயிற்று புண்களை ஆற்றும் குணம் கொண்ட வெந்தயம்:-
ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனைகளில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் அரசி கஞ்சியில் சிறிது வேகவைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெரும். வயிற்று புண்களும் குணமாகும்.
செரிமான கோளாறுகள்
ஒரு மனிதனுக்கு செரிமான உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருந்தாலே அவன் எந்த நோய்களும் அண்டாமல் நலமாக இருக்க முடியும். உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக அரைத்து விழுதாக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
உடல் எடை பிரச்சனைக்கு தீர்வு தரும் வெந்தயம்(Fenugreek):-
சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரிந்திட்டு சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும். கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.
தோல் நோய்களை குணப்படுத்தும் வெந்தயம்:-
நமது தோல்களில் கிருமி தொற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் சில பூச்சி கடிகளால் கொப்பளங்கள் புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அரிப்புகள் புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர நோய் குணமாகும்.
தீக்காயத்துக்கு அருமருந்து:-
உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை ஊற வைத்து. மையாக அரைத்து தீக்காயத்தின் மீது பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். ஒரு துண்டு இஞ்சியுடன் கொஞ்சம் வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
சிறுநீரக கற்களை தடுக்கும் வெந்தயம்:-
ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்வது சிறுநீரகங்கள். வெந்தயம் ஊற வாய்த்த நீரையோ அல்லது வெந்தையதை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். மூத்திரக்கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.வெந்தயத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படும்.
வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.
மலச்சிக்கலை போக்கும் வெந்தயம்:-
மலச்சிக்கல் வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ,மேலும் வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து சாப்பிட்டு வர அது மலசிக்களைப் போக்கும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும். செரிமான பிரச்சனைகள் செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முடிவுரை:-
அளவுடன் வெந்தயத்தை உண்டு வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த வெந்தயத்தை நமது அன்றாடம் நம் உணவில் சேர்த்து, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான வெந்தயத்தின், பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லது தானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம். இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல் தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு: இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதை முயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ் ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
Comments
Post a Comment