இன்றைய
காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒரே
இடத்தில் அமர்ந்து கணினி முன் வேலை
செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பது தான் உண்மை.
அவ்வாறு இருக்கும் போது நம்முடைய கண்களை
பாதுகாப்பது என்பது மிகவும் இன்றியமையாததும்
கூட.
கண் குறைபாடு ஏற்பட முக்கிய காரணம் என்ன?
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
இன்று தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் கம்ப்யூட்டர் வேலை
செய்வது, ஸ்மார்ட் போனில்(PUBG என்ற விளையாட்டில் மட்டும்
பல மணிநேரங்கள் உறைந்து இருக்கின்றனர் இன்றய
தலைமுறையினர்) விளையாடுவது
போன்றவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இன்றய
இளைய சமுதாயம் கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் பணிபுரிய
தான் அதிகம் ஆசைபடுகின்றனர்(Eye Problem Solution in Tamil
Health Tips).
நம்முடைய கண்களுக்கு அதிகம் வேலை கொடுப்பதால்
அதனை பாதுகாத்து கொள்வதும் மிக மிக அவசியம்.
எனவே இந்த பதிவில் நம்முடைய
கண்களை எவ்வாறு வீட்டில் இருந்தபடியே
பராமரிப்பது என்பதைசற்று தெளிவாக பார்க்கலாம்.
கண்களின்
அவசியம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை:-(Eye Problem
Solution in Tamil Health Tips)
கண்களின்
அவசியம் பற்றி நாம் அனைவருக்குமே
தெரிந்த ஒன்று தான்.கண்கள்
இந்த உகின் அழகை காண
உதவும் ஜன்னல்களாக உள்ளது. அப்படிப்பட்ட கண்களை
பாதுகாப்பது மிகவும் அவசியம்.நம்முடைய
கண்கள் குறிப்பாக கோடை காலங்களில் மிகவும்
அதிகமாக பாதிப்படையும்.
கண்கட்டி,கங்கன் சிவப்பாக மாறுதல்,கண்களில் இருந்தது நீர் வருதல் போன்றவை
ஏற்படும்.நம்முடைய வீட்டில் இருந்த படியே நம்முடைய
கண்களை இயற்கை முறையில் எவ்வாறு
பாதுகாத்துக்கொள்வது என்பதை பற்றிய சிறந்த
வழிமுறைகளை கீழ் கண்டவாறு காணலாம்.
நமது உறுப்புகளில் உள்ள புலன்களுள் கண்தான்
மிக முக்கியத்துவம் பெறுகின்றன.கண்களின் பார்வை குன்றாமல், அவை
எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.
- பண்ணைக்
கீரை, சிறு கீரை இவற்றைத்
தினமும் சாப்பிடுதல். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து
உண்ணல்.
- உணவில்
நெய் சேர்த்துக் கொள்ளுதல், பௌர்ணமியன்று இரவு சந்திரனைப் பார்த்துக்
கொண்டிருத்தல்.
- வாய் நிறையத் தண்ணீர் ஊற்றிக்
கொண்டு, கண்களை நன்கு திறந்து
சுத்தமான தண்ணீரினால் கண்களில் தெளித்துக் கொள்ளுதல்.
- இரவில்
படுக்கும் முன் திரிபலா சூர்ணம்
த்ரைபல கிருதம் என்னும் நெய்யை
லேசாக உருக்கிப் பொடியுடன் குழைத்து, பிறகு அரை ஸ்பூன்
தேன்விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடக் கண்
குளிர்ச்சியாகும். கண்நோய் எதுவும் வராமல்
தடுக்கும்.
- இரவு நேரங்களில் இரு உள்ளங்கால்களின் நடுவிலும்
பசுவின் நெய்யைத் தேய்த்துக் கொள்ளுதல்.
கண்களுக்கு
குளிர்ச்சி தரும் உணவுகள்(Cold food for the eyes):-
முருங்கை
பிஞ்சு, வெந்தயம், நீர்ச் சத்து மிகுந்த
பூசணி, சுரைக்காய், புடலங்காய், கேரட், பீட்ரூட், வழுதுணய்காய்,
பாசிப் பயறு, சுக்கு, சீரகம்
போட்டு காய்ச்சிய குடிநீர், மிளகு சேர்ந்த உணவு
வகைகள், உள்பட பச்சைக் காய்கறிகள்.
இந்த உணவு வகைகள் கண்களின்
உறுப்புகளை நன்கு பலப்படுத்தி பார்வை
நரம்புகளை வலுப்படுத்தி நமது
கண்களுக்கு நன்மை உண்டாக்கும்.
கண்களை
குறிப்பிட்ட இடைவெளியில் கழுவ வேண்டும்:-
தினமும்
சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்வதால் நம்முடைய
கண்களில் உள்ள தூசி மற்றும்
கண்களில் உள்ள தேவையற்ற கிருமிகள்
நீங்கி கண்களுக்கு பாதுகாப்பை தருகின்றது.கோடை காலங்களில் கண்கள்
சிவப்பாக மாறுவதையும் தடுக்க இந்த முறையை
பின்பற்றுவது நல்லது.
கண் கூசும் அதிக ஒளியை தவிர்க்கவும்:-
அதிகமாக
ஒளியை வெளிப்படுத்தும் இடத்தில் இருந்து நம் கண்களை
பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்குறிப்பாக
அதிகம் ஒளியை தரும் சூரிய
கதிர்கள் மற்றும் கண் கூசும்
அளவிலான ஒளியை நேரடியாக பார்ப்பதை
தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில்
அவ்வாறு பார்பதல் அந்த ஒளி நம்முடைய
கண்களில் உள்ள ரெட்டினாவை மிக
விரைவில் பாதிக்கும் ஆற்றல் அதிகம்.
கண் எரிச்சலுக்கு தீர்வு:-
கோடைகாலங்களில் கண் எரிச்சல் ஏற்படுவது சகஜம். அவ்வாறு இருக்கும் போது ரோஸ் வாட்டர் எடுத்து அதனுடன் விளக்கெண்ணையை கலந்து பருத்தி துணியால் அதனை தொட்டு கண்களில் இமைகளின் மேல் வைத்தால் கண் எரிச்சல் உடனடியாக சரியாகும்.
கருவளையம் போக என்ன செய்ய வேண்டும்:-
அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் மற்றும் கணினி உபயோகிப்பதாலும் கருவளையம் வரும். இதனால் கண்கள் அழகு இல்லாமல் இருக்கும்.வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் மேல் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்கும்.
கண்ணீர் எப்படி வருகிறது:-
கண்களுக்கு தேவையான கண்ணீரை நாம் தண்ணீர் குடிப்பதால் தான் கிடைக்கின்றது. எனவே தினமும் அதிகம் தண்ணீரை குடிக்க வேண்டும் இல்லையேல் கண்கள் மட்டுமல்லாது நம்முடைய உடலும் வறட்சியடையும்.
டிவி மற்றும் கம்ப்யூட்டர் முன் இடைவெளி அவசியம்:-
இது முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். நம் கண்களுக்கும் தொலைக்காட்சிக்கு இடையே அதிக இடைவெளி அவசியமான ஒன்று. குறிப்பாக கம்ப்யூட்டர் வேலை செய்யும் இளைஞர்கள் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வதாகி குறைத்து கொள்ள வேண்டும் இல்லையேல் சிறிது இடைவெளி வெட்டு அமர்ந்து கொள்வது நல்லது.
கண் பாதுகாப்பிற்கு நாம் என்ன செய்யவேண்டும்:-
கண் பாதுகாப்பில் முக்கியமாக வைகறை துயிலெமுவதைப் பழக்கமாக்கிக்
கொள்ள வேண்டும்.
சூரிய உதயத்திற்கு முந்தைய இரண்டு மணிநேரத்திற்கு
முன்னரே எழுந்து சுத்தமான தண்ணீரையும்
பருகுதல், பல் தேய்த்து வாயில்
நீர் நிரப்பிக் கொண்டு கண்களைக் குளிர்ந்த
நீரில் கழுவுதல், தினசரி அல்லது அடிக்கடியாவது
தலைக்கும் பாதங்களுக்கும் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்,
ராத்திரி தூங்கும் முன் உள்ளங்கால் நடுவில்
பசுநெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்துக்
கொள்ளுதல், உணவில் பொன்னாங்கண்ணி, ஊசிப்பாலைக்கீரை,
பசுவின் பால் போன்றவை அதிகம்
சேர்த்துக் கொள்ளுதல் முதலிய எளிய முறைகள்
கண்களுக்கு விசேஷ பலம் தரும்
வழிகளாகும்.
கண் பார்வை மேம்பட சில பயற்சிகள்:-
இந்த முறையை அனைத்து மருத்துவர்களும்
கூறும் ஒரு எளிமையான டிப்ஸ்
என்று சொல்லலாம். அதிக நேரம் கம்ப்யூட்டர்
முன் வேலை செய்யும் நபர்கள்
தினமும் சிறிதுநேரம் கண்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் நல்லது. தினமும்
20 நிமிடம் கண்களை மேலே கீழே
என அசைப்பது,வட்ட சுழற்சியில் சுழற்றுவது
என்று செய்வதால் கண்கள் பாதிப்பில்லாமல் இருக்கும்.
இறுதியில் சில டிப்ஸ்:-
சுத்தமான தண்ணீரால் அடிக்கடி கண்களைக் கழுவ வேண்டும்.சாதாரண
மையில் ஆரம்பித்து, ஐ லைனர், ஐ
ஷேடோ, மஸ்காரா என எல்லாமே
தரமான தயாரிப்புகளாக இருக்க வேண்டியது முக்கியம்.
கம்ப்யூட்டர்
முன் நீண்ட நேரம் வேலை
பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை சில நொடிகளாவது
மூடி ஓய்வெடுக்க வேண்டும்.
கண்களுக்குக்
குளிர்ச்சியைத் தரக் கூடிய பச்சை,
நீல நிறங்களை அடிக்கடி சிறிது நேரம் பார்க்கலாம்.கண்களைச் சுற்றி எப்போதும் மோதிர
விரலால்தான். அதுவும் மிக மென்மையாக
மசாஜ் செய்ய வேண்டும்.எட்டு
மணி நேரத் தூக்கம். 10 முதல்
15 டம்ளர் தண்ணீர் குடிப்பது இந்த
இரண்டும் மிக முக்கியம்.
முடிவுரை:-
இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களையும் நீங்கள் பெற மேற்குறிய வழிமுறைகளை பின்பற்றி நமது அன்றாடம் நம் உணவில் அதை சேர்த்து, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும்பரிச்சயமான அத்தி பழத்தை, பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.
மேலும் அடுத்த பதிவில் மற்றுமொரு ஆரோக்கிய கனி அல்லது காய்கறிகளை அல்லதுதானியத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ளமறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள், கட்டுரைகள், நோயின்றி வாழவும்,வருமுன் காக்கவும், இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே. இதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360- பொறுப்பாகாது.
Comments
Post a Comment