பிளாஸ்டிக்கிற்கு
அற்புத மாற்று பொருள் இருந்தும்
நாம் அதை மறந்தது ஏன்?(Health Benefits of Eating in Banana Leaf)
இன்றை காலத்தில் நமது நாகரிகம் எவ்வளவோ வளர்ந்து விட்டது என்று எண்ணி எத்தனையோ மிக பழமையான பல பாரம்பரியமான அற்புத விஷயங்களை நாம் மறந்து ஒதுக்கி கொண்டு
இருக்கிறோம்.
சொல்ல போனால் நம்
முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற பல அற்புத மருத்துவம் சார்ந்த
விஷயங்களை தவறவிட்டு
விட்டோம் என்று தான் சொல்ல
வேண்டும்.
அதில் ஒன்று தான் நாம் வாழை இலையை மறந்ததே முக்கிய காரணம் பிளாஸ்டிக் உபயோகிப்பது
நாளுக்கு நாள் அதிகரித்து அது
நமக்கே கேடு விளைவிக்கும் என்று
அறிந்தும் இன்னும் உபயோகித்து கொண்டு
இருக்கிறோம்.
தற்போது
அரசின் ஆணைப்படி பிளாஸ்டிக் தடை ஒரு புறம்
இருந்தாலும் ஒவ்வருவரும் தம் மனம் அறிந்து
இதனை கடை பிடிக்க வேண்டும்,
உங்கள் நலன் அறிந்து நாம்
இன்றும் பல ஹோட்டல்களில்
சாப்பிட போடப்படும் பிளாஸ்டிக் இலையை விட்டு விட்டு
இயற்கையான வாழை இலையை உபயோகிக்க
சொல்லி அதில் வாங்கி சாப்பிட்டு
இப்போதாவது மாறுங்கள்.
பிளாஸ்டிக்கிற்கு
அற்புத மாற்று பொருள் நம்மிடம்
இருந்தே ஏன் உபயோகிக்க மறந்தோம்.
இந்த பதிவை முழுவதுமாக படித்தால்
போதும் நீங்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக்கை
விட்டுவிடுவீர்கள்..இது எனது சவால்.
வாழை மரத்தின் அடி முதல் நுனி
வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த
பயன்பாடுகள். வீட்டு விழாக்களில் வாழைக்கன்று
மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப்
பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப் பின்பும்
மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.
விழாக்களில்
ஏன் வாழைமரத்தை பயன்படுத்தினார்கள்:-
காடும்
காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான்
தமிழன். எந்த வித நச்சும்
முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த
இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
விழாக்களில்
விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை
இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப்
பாடையிலும் வாழை மரம், மக்கள்
கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும்
வாழை மரம் என்று எங்கெங்கு
காணினும் வாழை மரத்தை வைத்தான்
நம் தமிழன். அதாவது நச்சு
முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
உணவுச்
சங்கிலியில் முக்கிய பங்கு வாழை
இலைக்கு உண்டு:-(Health Benefits of Eating in Banana Leaf)
‘‘உணவுச்
சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான்.
எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள்
உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது.
இலையில் உள்ள பச்சையம் சூரிய
ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும்
மாற்றுகிறது. அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான்
மூலப்பொருளாக இருக்கிறது.
நம்முடைய
முன்னோர்கள் இதில் உள்ள மருத்துவ
குணங்களை பற்றி தெரிந்ததால் தான்
அனைவரது வீட்டிலும் அன்று வாழை மரத்தை
வைத்திருந்தனர். அதில் உள்ள மருத்துவ
குணங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும்
உதவுகிறது. எனவே நாமும் வீட்டில்
வாழை மரத்தை வைத்து அதனுடைய
மருத்துவ குணத்தை பெற வேண்டும்.
நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்
இந்த வாழை இலை. நம்முடைய
பண்பாடு மற்றும் உணவு முறையில்
பெரும் பங்கு வகிக்கும் இந்த
வாழை இலையில் உள்ள மருத்துவ
குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு
தெரியாது(banana tree uses
in tamil).
வாழை மரத்தின் அனைத்து உறுப்புகளும் பயன்தரும்
:-
வாழை மரத்தில் உள்ள அனைத்து உறுப்புகளும்
ஏதேனும் ஒரு வகையில் நமக்கு
நன்மை தருகிறது. வாழை மரத்தில் உள்ள
வாழை இலை, வழலைப்பழம், வாழை
பூ, மற்றும் வாழை தண்டு
என அதனுடைய அனைத்து உறுப்புகளும்
நமக்கு மருதத்துவ குணங்களை தருகிறது. தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவதால்
நமக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன்
ஆமா வயறு தொடர்பான பிரச்சனைகளும்
நீங்கும்.
வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன அற்புத மருத்துவ நன்மைகள் உண்டாகின்றன?
நாம் உட்கொள்ளும் உணவை வாழை இலையில்
பரிமாறும் போது நமக்கு ஏராளமான
ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன.
உணவு பரிமாறுவதற்கு நமது முன்னோர் வாழை
இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், வாழை
இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில்
இருக்கிறது. இதனால் செல் சிதைவு
ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும்.
அதோடு
மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும்
தடுக்கப்படுகின்றன. வாழை இலையில் இருக்கும்
Polyphenol, செல்களில் உள்ள டிஎன்.ஏவை
கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது.
சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது
போல, வாழை இலையும் சிறுநீரகம்
மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை
இலையில் உள்ள பச்சையம் நோய்
எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.
முந்தய காலங்களில் மின் வசதி இல்லாத காரணத்தால் இருட்டில்
சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் நாம் எதிர்பாராத
விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது
வேறு எந்த வகையில் உண்ணும்
உணவில் தேவையற்ற நச்சு இருப்பினும் அதற்கான ஒரு உடனடி மற்றும் சிறந்த நச்சு முறிப்பான் என்றால் வாழை
இலை மட்டும் தான். அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
சாப்பிடும்
தட்டை எவ்வளவு கழுவியும் நோய் வருவதற்கான காரணம்:-(Health Benefits of Eating in Banana Leaf)
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவினாலும் அல்லது வெந்நீரால் நன்றாக அலசி காயவைத்து
எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்தினாலும் குறிப்பாக நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால்
வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு
நோய்கள் ஏதும் சிறிது கூட அண்டவில்லை. இதை நாம் என்றாவது யோசித்துப்
பார்த்திருக்கிறோமா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு
உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும்.
உடல் நலம் பெறும். மந்தம்,
வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள்
நீங்கும். அழல் எனப்படும் பித்தமும்
தணியும்.
வாழையிலையின்
மேல் உள்ள பச்சைத் தன்மை
(குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச்
செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை
கொண்டது.
இது பசியை நன்குத் தூண்டும் குணம் கொண்டது.
வாழையிலையில் உண்பவர்கள் நீண்ட நாள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
மத்திய
சாப்பாட்டிற்கு வாழை இலை ஏற்றது
ஏன்:-
அலுவலகம்
செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய
உணவை எடுத்துச் செல்ல வாழை இலை
சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே
இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய
உணவு கொண்டு செல்ல வாழை
இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது
விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை
இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
இதிலிருந்தே அதன் மகத்துவம் நமக்கு
புரியும்.
வாழை இலையில் பழங்கள் முதல்
பூ வரை வைப்பதற்கான காரணம்:-
வாழை இலையின் சிறப்பம்சமே அதன்
குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை தொடந்து வெளியிட்டுக்கொண்டே தான் இருக்கும்.
வாழை இலையில் குறிப்பாக வைக்கப்படும் காய்கள், கீரைகள், பூக்கள், பழங்கள், ஆகியவை விரைவில்
வாடாது. இதனால் நம் வாழை இலையை பயன்படுத்துவதன் மூலம் உடல்
நலம் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு
பல வித நன்மைகள் உண்டாகிறது என்பதோடு நின்று விடாமல் சாப்பிட்டு முடித்த பின்பு வாழை
இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது. ஆகவே,
வாழை இலையில் சாப்பிடுவதை நாம் ஒரு வாடிக்கையாக கண்டிப்பாக ஆக்கி கொள்ள வேண்டும்.
வாழை மரத்தில் இருந்து எடுக்கும் வாழை
பழத்தால் ஏற்படும் நன்மை:-
நாம் தினமும் ஒரு வாழைப்பழத்தை
சாப்பிடுவதால் நமக்கு கண் பிரச்சனைகள்
வராமல் பார்த்து கொள்ளலாம். இதில் உள்ள ஊட்ட
சத்துகள் நமக்கு தேவையான வைட்டமின்களை
தருகிறது. எனவே நமக்கு மாலை
கண் வரும் அபாயம் தடுக்க
படுகிறது.
வைட்டமின்
டி சத்து உள்ள வாழை
இலை:-
இது குழந்தைகளுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்க
உதவுகிறது.குழந்தையை அதிகாலையில் சூரிய ஒளியில் காட்டும்
போது வாழை இலையில் இன்ஜி
எண்ணையை தடவி சூரிய ஒளி
படும்படி வைப்பதால் குழந்தைக்கு தேவையான வைட்டமின் டி
சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே இதனை தவறாமல்
செய்வதால் குழந்தையின் சரும பிரச்சனைகள் நீங்கும்.
சரும பிரச்சனைகள் போக்கும் ஆற்றல் கொண்ட வாழை:-
நம்முடைய
சரும பிரச்சனைக்கு இந்த வாழை இலை
சிறந்த மருந்தாக இருக்கிறது. இதற்க்கு வாழை இலையில் சிறிது
தேங்காய் எண்ணெய் ஊற்றி நம்முடைய
சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில்
வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்
தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனை தொடர்ந்து செய்வதால்
நமக்கு தோல் அரிப்பு ஏற்படுவது
தடுக்க படுகிறது.
தீக்காயம்
பட்டவர்களுக்கு ஏன் வாழை இலையை
உபயோகிக்கிறார்கள்:-
நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்
இது. தீக்காயம் ஏற்பட்டால் வாழை இலையில் தான்
படுக்க வைப்பார்கள். இதற்க்கு காரணம் வாழை இலையில்
உள்ள குளிர்ச்சி சக்தி தான்.
தீக்காயங்களுக்கு
ஆளானவர்களை முக்கியமாக வாழை இலையில் ஆன படுக்கையில் தான் படுக்க வைப்பார்கள்.
வாழை இலையின் குளிர்ச்சியும், வாழை இலை வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக்
கூடியதாகவும் இருக்கிறது.
வாழை இலை சருமத்தில்
ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது
என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து.
முடி பிரச்சனை நீங்கும்:-
நாம் தினமும் வாழை இலையில்
உணவுகளை உண்பதால் நமக்கு தேவையான ஊட்ட
சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றன.இதனால்
இளம் வயத்தில் ஏற்படும் இளநரை பிரச்சனை நீங்கும்.
மேலும் முடி உதிர்தலும் தடுக்கப்படும்.
நமக்கு தேவையான ஊட்ட சத்துகள்
வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம்
கிடைப்பதால் இதனை தினமும் மேற்கொள்வது
நல்லது.
மேலும்
என்ன என்ன நன்மைகள் உண்டு:-
முதலாவது
வாழை ஒரு நல்ல நச்சு
முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல
கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட
பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில்
வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
வாழைத்தண்டுச் சாறும், வாழை இலையால் ஆன படுக்கையும், வாழைக்கிழங்கின் சாறும் சக்திமிக்க நச்சு
முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும்
கிராமங்களில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடித்து விட்டால் அவர்களுக்கு
முதலில் பருகக்கொடுப்பது வாழைச்சாறு தான். இதனால் நச்சு முறிந்து, விரைவில் குணமடைவார்கள்.
வாழை இலையில் அதிக அளவு
ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. எனவே தினமும்
வாலி இலையில் உணவு உண்பது
நல்லது.
வாழை இலையில் உணவுகளை கட்டி
எடுத்து செல்வதால் நம்முடைய உணவு கெட்டு போகாமல்
இருக்கும்.
இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்கள் இருப்பதால் நம் உடலுக்கு நோய்
எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
மேலும்
இது போன்ற ஆரோக்கியமான இயற்கை
முறை மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே உள்ள
பெல் பட்டன்-ஐ க்ளிக்
செய்யவும்.
முடிவுரை:-
வாழைமரத்தில்
இருந்து நாம் பல பயன்களை
பெற்று வருகின்றோம்.
அதில் வாழை இலையின்
பயன்பாடும் முக்கியம் என்பதை உணர்ந்து இனிமேல்
ஆவது வாழை இலையின் பயன்பாட்டை
அறிந்து அதை அதிகம் பயன்படுத்தி
நல்ல ஆரோக்கியமும்,
உடல் நலமும் பெறுவோம்.
இனிமேல் வாழை இலையில் உணவருந்தி வளமுடனும், நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.
இத்தனை பயன்களைக் கொண்ட இந்த வாழை இலை நம் அன்றாடம் சிறிதலாவவுது சேர்த்து,நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம். ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான , வாழையின் பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.
நமக்கு நோய் வந்தபின் அவதிப்படுவதை விட வரும் முன் காப்பது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்து நமது உடல் நலத்தை பாதுகாக்கும் இது போன்ற உணவு வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்…
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”… என்பதை உணர்ந்து வாழ்வோம்!!!
இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:-
இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள்,
கட்டுரைகள்,
நோயின்றி வாழவும்,
வருமுன் காக்கவும்,
இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே.
இதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த்டிப்ஸ் 360-
பொறுப்பாகாது.
Comments
Post a Comment