அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பொங்கல் திருவிழாவில் மஞ்சளின் பங்கு மற்றும் ஆச்சரிய மூட்டும் மருத்துவ பயன்கள்

இஞ்சி குடும்பத்தை சேர்ந்த நிலத்தடி குறுஞ்செடிதான் மஞ்சள் (Rhizomatous herbaceous) வகையை சார்ந்த தாவரம். இதில் உள்ள மருத்துவ பலன்கள்(Medicinal uses) என்பது பல மடங்கு அதிகம்.

முக்கியமாக மஞ்சள் உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் பயன்படும் தாவரம் மஞ்சள். நமது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதில் மஞ்சளின் பங்கு அதிகம்.

இரு வகை மஞ்சள்:-

மஞ்சளில் இரு வகைளில் ஒன்றை சமையலுக்கு பயன்படுத்துவோம், மற்றொன்று முகத்தில் பூசுவதற்கான மஞ்சள் ஆகும்.

மஞ்சளில் உள்ள ஊட்டச்சத்து என்ன என்ன:-

மஞ்சளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன, அவை
இரும்பு(Iron) , மாங்கனீசு (manganese ) , நார்ச்சத்து(Fibre), சாம்பல் சத்து(potasium) , வைட்டமின் (Vitamin)B6 , தாமிரம்(Copper), புரதம்(Protein), கனிமங்கள் (Minerals), மாவுசத்து(Carbohydrates) , கொழுப்பு அமிலம் (Fatty acids).

க்யுர்குமினைட் என்றால் என்ன?

க்யுர்குமினைட்(curcuminoid) என்னும் இரண்டாம்நிலை வளர்சிதை மாற்றபொருளில்(Diarylheptanoids) க்யுர்குமின்(Curcumin) உள்ளது இது மஞ்சள் நிறமி ஆகும்.
  
மஞ்சளின் வேரில் க்யுர்குமின் அமைந்திருக்கும் இதற்கும் மருத்துவ குணம் அதிகம் உள்ளது.

க்யுர்குமினின்(Curcumin) மருத்துவ பயன்கள்:-

க்யுர்குமின் மஞ்சளின் வேர்களில் குறைந்த அளவே காணப்படும். ஒவ்வொரு வகைக்கும் இதன் அளவுகள் மாறுபடும்.

இரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும்.

அழற்சியை கட்டுப்படுத்தும்.

இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தும் .

தமிழர்களின் பொங்கல் திருவிழாவில் மஞ்சளின் பங்கு:-

மஞ்சள் கிழங்குகள், பளிச்சிடும் மஞ்சள் நிறமானவை. நறுமணமுள்ளவை. உலர்ந்த கிழங்குகளே மருத்துவப் பயன் கொண்டவை. இவை மஞ்சள் என்கிற பெயரில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும்தாலிக் கயிறில்" பூசப்படுகிறது. அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது.

மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை" என்பது முன்னோர் வாக்கு. பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது.

குங்குமம், வெற்றிலை, பாக்கு, துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம்,

மரமஞ்சளின் மருத்துவ பயன்கள்:-


  • மரமஞ்சள் என்பது ஏறுகொடி. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், இலங்கையிலும் காடுகளில் விளைகின்றது. காலேயகம், தாறவி போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. மரமஞ்சள் தண்டு கட்டைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.
  • மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.
  • மஞ்சள் நீண்டு உருண்ட, ஈட்டி வடிவமான இலைகள் கொண்ட தண்டுகள் அற்ற செடி.
  • தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் இதன் உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.
  • மரமஞ்சள் அதிக மணமுள்ளவை. பெர்பெரின் எனப்படும் அல்கலாய்டு அதிக அளவில் இந்த தாவரத்தில் காணப்படுகின்றது. மரமஞ்சள் தண்டு கட்டைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவை காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கம்.
  • தண்டு கட்டைகள் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டவை; இவை உடல் வெப்பத்தை அகற்றும்; பசியைத் தூண்டும்; உடலை பலப்படுத்தும்; சுவாச நோய்கள், மூலம், மயக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மருந்துகளில் மரமஞ்சளும் சேர்கின்றது. மேலும் குடற்புண், அஜீரணம் போன்றவற்றிற்கான மருத்துவத்திலும் நேரடியாக உபயோகமாகின்றது.
  • மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி ½ மணிநேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.
  • சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.
  • நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது;
  • தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில்
  • முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது.
  • ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.

மஞ்சளின் முக்கியத்துவம் அறிந்த மற்ற நாடுகள்:-

இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது.

மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பங்கு:-

இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனப் பொருள் முக்கிய இடம் மஞ்சளுக்கு உண்டு:-

அழகு சாதனப் பொருள் வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்"சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். இது ஒரு பாரம்பரிய முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

மஞ்சளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்:-

மஞ்சளை அநேகம் நேரடியாக பயன்படுத்த முடியாது. அதை காயவைத்து தூளாக்கி தான் பயன்படுத்துவர்

நோய் தீர்க்கும் அருமருந்து மஞ்சள்:-

  • வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.
  • உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.
  • ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.
  • உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகி விடும். மஞ்சள் தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.
  • முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு.
  • மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
  • மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகள்பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் பூசவேண்டும். கட்டிகளாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாள்கள் பூசிய பிறகு பழுத்து உடைந்துவிடும். பிறகு சிகிச்சையை தொடர அவை குணமாகும்.
  • மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதோன்றி இலை 10 கிராம், கற்பூரம் சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டி வர கால் ஆணி குணமாகும். 10 நாள்களுக்குச் சிகிச்சையைத் தொடரலாம்.
  • மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.




  • மஞ்சளை நன்கு காய வைத்து, இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை 1 டம்ளர் நீரில் கலந்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சுத்தமான மெல்லிய துணியால் வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் சுத்தமான பஞ்சை நனைத்து கண்களில், மூக்கிலிருந்து பக்கவாட்டில் ஒரு நாளைக்கு ஆறு முறை வீதமாக விட்டு வந்தால் கண்ணில் நீர் வடிதல் மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
  • ஒரு துண்டு மஞ்சளைச் சுண்ணாம்பு தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். அல்லது ஒரு டம்ளர் பாலில் 1 தேக்கரண்டி அளவு மஞ்சளய் தூள் கலந்து காலை மாலை குடித்து வர வறட்டு இருமலுடன் வரும் காய்ச்சல் குணமாகும்
  • உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது. மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.
  • கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ் என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும். கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும்.
  • கஸ்தூரி மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.
  • மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும். பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.
  • முகத்தோல் சொரசொரப்பாக இருந்தால் மஞ்சளோடு துளசியை அரைத்துப் பூசி வரவும். வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.
  • உடலின் உள்ளே உள்ள சீர்குலைவை கட்டுப்படுத்தும்.
  • சளி தொல்லைகளில் இருந்து நிவாரணமளிக்கும்.
  • காய்ச்சலை குணப்படுத்தும்
  • மூச்சுக்குழல் அழற்சிக்கு பயனளிக்கும்.
  • நரம்பணுக்களில் அழற்சியை குறைப்பதால் அல்சைமர்(Alzheimr) நோயை கட்டுப்படுத்தும்.
  • மார்பகம் , நுரையீரல் , வாய் மாற்றும் தொண்டை புற்றுநோய்(Cancer) வராமல் காக்கும்.
  • உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும்.
  • கீல்வாதத்தை குணப்படுத்தும்.
  • இரத்தத்தில் உள்ள கொழுப்பை சீர்படுத்தும்.

மஞ்சளின் பாதகங்கள் என்ன என்ன:-

  • மஞ்சளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது சில தேவையற்ற எதிர் விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
  • ஆண்கள் மஞ்சளை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது விந்துஇயக்குநீர் (Testosterone) அளவை குறைத்து மலட்டுத்தன்மையை(Infertility) ஏற்படுத்திவிடும்.
  • இரத்த கசிவில் பிரச்சனை உள்ளவர்களுக்கு மஞ்சள் உதிரப்போக்கை அதிகரித்துவிடும்.
  • உதிரப்போக்கை அதிகரிப்பதால் கருத்தரித்திருக்கும் பொழுது மஞ்சளை குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும் இல்லை என்றல் கருச்சிதைவை ஏற்படுத்தி விடும்.
  • பித்தப்பையில் பிரச்சனைகள் ஏற்படும்.
  • இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படும்.
  • இரத்த அழுத்தத்தை குறைத்துவிடும்.
  • க்யுர்குமினில்ஒவ்வாமை பொருள் (Allergen)இருப்பதால் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.

முடிவுரை:-

மஞ்சளின் மூலமாக நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம்அதில் மஞ்சளின் பயன்பாடும் முக்கியம் என்பதை உணர்ந்து இனிமேல் ஆவது மஞ்சளின் பயன்பாட்டை அறிந்து அதை அதிகம் பயன்படுத்தி நல்ல ஆரோக்கியமும்உடல் நலமும் பெறுவோம்.

இனிமேல் மஞ்சளை உணவுடன் அருந்தி வளமுடனும்நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே.

இத்தனை பயன்களைக் கொண்ட இந்த மஞ்சளை நம்  அன்றாடம் சிறிதலாவவுது சேர்த்துநல்ல ஆரோக்கியமும்பலனும் பெறுவோம்.  ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான , மஞ்சள் பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம்.

நமக்கு நோய் வந்தபின் அவதிப்படுவதை விட வரும் முன் காப்பது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்து நமது உடல் நலத்தை பாதுகாக்கும் இது போன்ற உணவு வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து வாழ்வோம்!!!
இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.

குறிப்பு:- இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள்கட்டுரைகள்,  நோயின்றி  வாழவும்,வருமுன் காக்கவும்இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமேஇதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த்டிப்ஸ் 360பொறுப்பாகாது.

Comments