வில்வ பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள் (Vilvam Health Benefits In Tamil)
இன்றைய
தலைமுறையில் நம்மில் பலருக்கும் வில்வ
இலையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதற்க்கு முக்கிய காரணம் நாம்
இதனை அதிக அளவு பயன்படுத்துவதில்லை.
இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு
இடங்களில் மட்டுமே நாம் பார்த்திருப்போம்.
மற்ற நேரங்களில் நாம் இதனை பற்றி
தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
ஆனால்
இதன் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்து
இருந்தால் இதனை அனைவரும் வாங்க
மறக்க மாட்டேர்கள்.
இதில் எண்ணற்ற மருத்துவ
குண நலன்கள் நிறைந்து உள்ளது.
அதனை பற்றி இந்த பதிவில்
சற்று விரிவாக பார்க்கலாம்.
இயற்கையின்
மருத்துவம்:-
நம்முடைய
இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து
விதமான மருந்துகளும் நிறைந்து உள்ளது. ஆனால் இன்று
நமக்கு அதனை பற்றி தெரியாமல்
இருப்பதால் தான் அதனுடைய பலன்களை
நம்மால் பெற முடியாமல் போகிறது.
அத்தகைய இயற்கை மருத்துவத்தை பற்றி
இன்றைய தலைமுறையினர் மிக விரிவகா தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவை தமிழ்
ஹெல்த் டிப்ஸ் 360 எடுத்துரைக்கிறது. அதில் ஒரு பகுதி
தான் இந்த வில்வ இலையின்
மருத்துவ குணங்கள். நம் உடலுக்கு தேவையான
அனைத்து மருந்துகளும் இருக்கிறது. அதனை பற்றி இப்போது
விரிவாக பார்க்கலாம்.
வயிற்று
வலி குணமாக:-
நமக்கு
வயிற்று வலி ஏற்படுவதற்கு பழக்க
காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம்
உண்ணும் உணவால் தான் இருக்கும்.
மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும்
ஆகும். இந்த வில்வ தளிரை
வதக்கி நாம் சூடாக்கி குடித்து
வந்தால் நம் வயிற்றில் உள்ள
நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று
வலி நீங்கும். மேலும் இது வயிறு
தொடர்பான பல கோளாறுகளை சரி
செய்ய உதவும்.
முடி உதிர்தல் முற்றிலும் குறைக்க:-
இன்றைய
காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் முடி உதிர்தல். சிறு
வயதிலே முடி கொட்டி விடுவதால்
நமக்கு வயதான தோற்றம் மற்றும்
மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதில் இருந்து நாம்
விடுபட இந்த வில்வ இலை
மிக சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
சிகிச்சை முறை:-
வில்வ காயை எடுத்து
அரைத்து அதனுடன் பால் கலந்து
நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள
வேண்டும்.
சிறிது நேரம் கழித்து
நாம் குளிக்க வேண்டும்.
இவ்வாறு
செய்தால் நமக்கு கண் எரிச்சல்.
மற்றும் முடி உதிர்தல் முற்றிலும்
நீங்கும்.
கண் பிரச்சனைகள் நீங்க:-
கோடை காலம் வந்து விட்டால்
நமக்கு சரும பிரச்சனைகளோடு கண்
பிரச்சனைகளும் அடிக்கடி வரும். இதற்க்கு மூல
காரணம் நம்முடைய உடல் சூடாவது தான்.
இதனால் நம் கண்கள் சிவத்தல்,
கண் அரிப்பு, கண் வலி என
பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு
இந்த வில்வ இல்லை ஒரு
சிறந்த மருந்தாக இருக்கும்.
சிகிச்சை
முறை:-
வில்வ இலையை வதக்கி சூட்டுடன்
நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால்
இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
காது வலி நீங்க:-
நமக்கு
காது வலி வரும் போது
உடனடியாக மருத்துவரிடம் செல்ல முடியாத நேரத்தில்
இந்த வில்வ இல்லை நமக்கு
சிறந்த நிவாரணமாக இருக்கும்.
சிகிச்சை
முறை:-
இந்த வில்வ இலையை கசக்கி அந்த
சாறை எடுத்து நம் காதுகளில்
சிறு துளி விட வேண்டும்.
இதனால் நம்முடைய காது வலி விரைவில்
நீங்கும். மேலும் இதனை செய்வதால்
நமக்கு எந்த பக்க விளைவும்
இருக்காது.
உடல் சோர்வு நீங்க:-
வில்வ இலையை கசக்கி அந்த
சாறுடன் பால் அல்லது நெய்
கலந்து சாப்பிட்டு வந்தால் நமக்கு உடல்
சோர்வு நீங்கும்.
சிகிச்சை முறை:-
இந்த வில்வ
பழத்தின் ஓட்டை உடைத்து அதில்
உள்ள சதை பகுதியை மட்டும்
எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து
சாப்பிட்டு வந்தால் நீண்ட நாளாக
இருக்கும் பித்தம் நமக்கு நீங்கும்.
வாய் நாற்றம் நீங்க:-
இந்த வில்வ இலையானது விஷத்தை
முறிக்கும் சக்தி கொண்டது. இதில்
உள்ள வேதி பொருட்கள் நம்
வாயில் உள்ள நுண்ணயிர்களை அழிக்கும்
வல்லமை கொண்டது. மேலும் இது வாய்
நாற்றதையும் நம்முடைய நாக்கில் ஏற்படும் புண்களையும் நீக்கும்.
வில்வ இலையில் இருக்கும் அற்புத
பலன்கள்:-
வில்வ இலையை பொடியாக்கி ஒரு
தேக்கரண்டி எண்ணெய் விட்டு குடித்து
வந்தால் உங்களுக்கு உள்ள மலசிக்கல் நீங்கும்.
வில்வ இலைக்கு சோகை நோயை
நீக்கும் சக்தியும் உள்ளது.
வில்வ வேரினை பொடியாக்கி அதனுடன்
சிறிது நீர் சேர்த்து பத்து
போட்டால் நம் தலை வலி
முற்றிலும் நீங்கும்.
மேலும்
கை-
கால் பிடிப்பு,
வீக்கம்,
உடல் அசதி,
போன்றவற்றை நீக்கவும்
இந்த வில்வ இலை பயன்படுகிறது.
முடிவுரை:-
நமக்கு நோய் வந்தபின் அவதிப்படுவதை விட வரும் முன் காப்பது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்து நமது உடல் நலத்தை பாதுகாக்கும் இது போன்ற உணவு வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்…
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”… என்பதை உணர்ந்து வாழ்வோம்!!!
இனி வரும் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள மறக்காமல தமிழ்ஹெல்த் டிப்ஸ் 360 Subscribe செய்துகொள்ளுங்கள்.
குறிப்பு:-
இந்த பிளாக்கில் உள்ள மருத்துவ குறிப்புகள்,
கட்டுரைகள்,
நோயின்றி வாழவும்,
வருமுன் காக்கவும்,
இயற்க்கை முறை மருத்துவத்தை தெரிந்து கொள்ள மட்டுமே.
இதைமுயச்சிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தமிழ்ஹெல்த்டிப்ஸ் 360-
பொறுப்பாகாது.
Comments
Post a Comment