Posts

Showing posts from July, 2018

அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

இனி தொப்பையை பற்றி கவலை வேண்டாம்! அன்னாச்சி பழத்தில் உள்ளது ஆயிரம் மருத்துவ குணங்கள்!

Image
இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் இருப்பதுடன் மருத்துவ குணங்கள் இருப்பதும் நமக்கு பல நன்மைகளை செய்கிறது. அன்னாச்சி பழத்தின் சுவை போலவே அதன் குணங்களும் அற்புதமானது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் முக்கியமான ஒன்றே அன்னாச்சி. சுவைமையும், மணமும் நிறைந்த அன்னாச்சி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும், புரதச்சத்து 0.60, தாது உப்புகள் 0.05, நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. என்ன என்ன வைட்டமின்கள் உள்ளன?  வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி,  எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை சீக்கிரம் குணமடைய அன்னாச்சி பழம் உதவுகிறத

திராட்சை பழத்தை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Image
திராட்சை பழம் பல நிறங்களில் காண்பவரின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். பழக் கிண்ணங்களில் திராட்சைக்கென்று ஒரு தனி இடம் உண்டு. இனிப்புகளிலும் ஐஸ்க்ரீம்களிலும் திராட்சையின் பங்கு முக்கியமானது. ஆகையால் இந்த பழத்தை "பழங்களின் ராணி" என்று அழைப்பர். திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. முழு பழங்களாகவும், உலர் திராட்சை பழங்களாகவும் உட்கொள்ள படுகின்றன. அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது . என்ன என்ன வைட்டமின்கள் உள்ளது?   ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் ஏ,பி1, பி2, பி3, பி6, பி12, சி, போன்ற வைட்டமின்கள் கொண்டுள்ளது. மேலும் கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களு

ஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா???

Image
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின்கள்? பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களில் மிகச் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.  ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் C. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும்.  உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஆரஞ்சு சாறோ குடிக்கலாம். இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சினை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும

மாம்பழத்தில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்!படித்து பயன் பெறுக! Health Tips for Mango Fruit!

Image
மாம்பழங்களில் அடங்கியுள்ள வைட்டமின் சத்துக்கள் வருமாறு:- மாம்பழங்களில் வைட்டமின்கள் "C" மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அவை கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு துணைபுரியும். வைட்டமின் "A" மாம்பழத்தில் அதிகம் இருக்கிறது. கண்கள் வறட்சி அடைவதை தடுக்கும். பார்வை திறனை மேம்படுத்தவும் உதவும். பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது நமது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம். கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழத்தை தவிர்க்கவும்!   கற்கள் வைத்துப் பழுக்கவைக்கும் மாம்பழங்களையும் மிக எளிதாக கண்டறியலாம். இயற்கையாகப் பழுத்த பழங்களில் தோல் சற்று சுருங்கி கொழ  கொழ வென இருக்கும். செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழம் கடினமானதாகவும், பல பல வென மின்னும். ஆகவே மாம்பழத்தை பார்த்து தெளிவாக வாங்க வேண்டும். மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் என்பது குறிப்படத்தக்கது.

வாழை பழத்தில் இருக்கு 1000 நன்மைகள்? Banana Health Tips!

Image
பழங்கள் சாப்பிடுவதில் பலருக்கும் இருக்கும் கெட்ட பழக்கம்!  வாழை பழத்தை பொறுத்த வரையில் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது. ஏழை எளிய மக்கள் விரும்பி வாங்கும் பழம் வாழைப் பழம். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ற சத்தான பழம் தான் செவ்வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. அதில் உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. அநேக மக்கள் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் தங்கள் உணவை முடித்த பின்பு பழம் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. உண்மையில் அது தவறு.   நீங்கள் முதலில் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் செரிக்கும். நீங்கள் சாப்பிட்ட உணவு ஜீரணமாக கூடுதல் நேரமாகும். நீங்கள் சாப்பிட்ட உணவு செரிக்காத நிலையில் உடனே பழம் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானம் ஆகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். எனவே, சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு அல்லது சாப்பிட்டு 1 மணி நேரத்திற்கு பின்னர் பழம் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. பழங்களைத் தனியாக சாப்பிடாமல். அதனை ச

100 வருடம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா! இத படிங்க முதல! Amla Health Benefits in Tamil

Image
நெல்லிக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்:- (Amla Health Benefits in Tamil) அன்றாடம் நமது உடலை ஆரோக்கியமாகவும், திடமாகவும்  வைத்துக் கொள்வதில்  முக்கியத்துவமாக இருப்பது  உணவுப் பொருட்களும், நமது பழக்கவழக்கங்களும் தான்.  தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை எப்போதும்  இளமையுடனும், சுறு சுறுப்புடனும் இருக்கலாம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் வாழ்நாளில் நீண்ட நாட்கள் இளமையுடனும்,  ஆரோக்கியமாகவும்  வாழ  நெல்லிக்கனி  முக்கிய பங்காற்றுகிறது.  நெல்லிக்காயில் என்ன என்ன வகை உண்டு? ( Varieties of Amla in Tamil)   நெல்லிக்காயில் பல வகையுண்டு அதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால்:    1. பெருநெல்லி  2. கருநெல்லி 3. அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.  நெல்லிக்கனியில் எத்தனை சுவை உண்டு?  ஐந்து வகை சுவை கொண்டது நெல்லிக்கனி,  ஆறு சுவைகளில் முக்கியமாக இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன.  நெல்லிக்கனியில் என்ன என்ன சத்துக்கள் உள்ளன?  (How Many