அதிசய சத்துகள் நிறைந்த கருப்பு தினை (அ) கருப்பு கீன்வா (Black-Quinoa Health Benefits in Tamil)

Image
B lack Quinoa என்பதை தமிழில் கருப்பு கீன்வா(கருப்பு தினை) என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் இன்காஸ் என்ற பழங்குடியினர் இந்த தானியத்தை உணவாக சாப்பிட்டு வந்துள்ளனர். கருப்பு  தினை அல்லது கீன்வா(black-quinoa health benefits) என்றால் என்ன?  கருப்பு கீன்வா(black-quinoa) மற்றும் வொயிட் கீன்வா(White-quinoa)  என்ற இரண்டு வகைகள் உள்ளன. முக்கியமாக கருப்பு கீன்வா கருப்பான நிறத்தை அளிப்பதோடு நமது உடலுக்கு பல நன்மையையும் தருகிறது. கருப்பு  தினை லேசாக இனிப்பு சுவையுடன் காணப்படும். இன்சுலின் அளவை மேம்படுத்துவதால் சக்கரை நோயாளிகள் இதை தாராளமாக உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

அடுத்த டாப் 25 அற்புத மருத்துவ குறிப்புகள்: குழந்தை வளர்ப்பு முதல் நோயின்றி வாழ அற்புத வழி!

குழந்தை வளர்ப்பில் நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:-  (Children's Health Tips in Tamil)


1. சிறு குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும்இதனால் ஓடி ஆடி விளையாடும்போது அவர்களுக்கு அதிகளவில் வியர்வையாக வெளியேறும் நீரை, அவர்கள் அருந்தும் நீர் அதை ஈடு செய்யும்.

2. தாய்ப்பாலை(Breastfeeding) சேமித்து கொடுப்பது அவ்வளவு நல்லது அன்று. ஏதோ தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில், நல்ல சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்படி சேமித்து வைக்கும் தாய்ப்பால் சாதாரண அறை வெப்ப நிலையில் சுமார் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.


3. அனைவரும் என்னும் எண்ணம் தயிர்(Curd Health Tips) சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் உடனே சளி பிடிக்கும் என்பது ஆனால் அது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் சத்தான சிறந்த உணவு. முக்கியமாக தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம் உள்ளது. அது குழந்தைகளின் குடலுக்கு மிக ஏற்றது. குறிப்பாக குழந்தைக்கு அலர்ஜி வராமல் பாதுகாப்பு அரணாக இருந்து தடுக்கும் மருத்துவ குணம் கொண்டது தயிர்.


4. வாழைப்பழத்தில்(Banana Fruit Health Tips in Tamil) இருக்கும் பொட்டாசியம் சத்து குழந்தைகளின் மூளைத் திறனைத் தூண்டி மேம்படுத்துகிறது.

5. மாவுச் சத்துக்கள் அதிக அளவு உள்ள உணவே குழந்தைகள் சாபிடுவதால் அவர்களுக்கு வாழைப்பழம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்கும். பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பார்கள் அது முற்றிலும் தவறு.

6. நாம் அனைவரும் நம் குழந்தைகள் நல்ல உடல் வகுடன் குண்டாக இருக்க வேண்டும் என்று எண்ணி சற்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து குழந்தைகளின் உடலை பருமனாக்காதீர்கள். என்னென்றால் 60 வயதில் வர வேண்டிய பி.பி(B.B)., சுகர்(Suger) போன்றவை அவர்களுக்கு 30 வயதிலேயே வந்துவிடும். ஆகவே குழந்தைகளை எப்போதும் சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பார்ப்பதே சிறந்தது.

7. இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் அதிக அளவில் தேவைற்ற 5 ரூபாய்க்கு பாக்கெட்டில் அடைத்து தரப்படும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகததவிர்க்க வேண்டும்அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கு முளைகட்டிய பயறுதானியங்கள்போன்றவற்றைச் சாப்பிடலாம்.

உணவே மருந்து:-

8. நீங்கள், கண்டிப்பாக தினமும் 5 விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவரா..? அப்படி என்றால் கவலை வேண்டாம்... ஆரோக்கியமும், அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!


9. ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ்யை தினமும் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, ரத்த அழுத்தம், நச்சுத்தன்மை என பல விதமான பிரச்னைகளுக்குத் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
  
10.ஆப்பிள் பழத்தை பலரும் தோலை சீவி சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர் அது முற்றிலும் தவறு. ஏனென்றால் ஆப்பிள் பழத்தின் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்கும் சிறந்த பணியை செய்கிறது.

11. நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ள கைக்குத்தல் அரிசியைப் சமையலுக்குப் பயன்படுத்துவது மிக மிக நல்லது.

மனநலக் கோளாறு நீங்க:-

12. பயம், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி6 தர்பூசணியில் அதிகம் உள்ளது. எனவே மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தினசரி அவர்கள் உண்ணும் உணவில் தர்பூசணி துண்டுகளை சேர்த்து கொள்வது மிக அவசியம்.

வெள்ளை அணுக்கள் அதிகரிக்க:-

13. பூண்டை தொடர்ந்து உணவில் எடுத்து கொள்வதன் மூலம் உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். குறிப்பாக வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும் ஆற்றல் கொண்டது பூண்டு. ஆகவே அன்றாட உணவில் சிறிதளவாவது கண்டிப்பாக பூண்டை சேர்த்து கொள்வது அவசியம்.

சிவப்பு அணுக்கள் அதிகரிக்க:-

14. பீட்ரூட், புடலங்காய், அவரை, முருங்கைக்கீரை, உளுந்து, பச்சைநிறக் காய்கள், துவரை, சோளம், கம்பு, கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் நம் உடலின்  சிவப்பணு உற்பத்தியை நன்கு அதிகரிக்க முடியும்.

சூட்டை தணிக்க:-

 15. பனங்கற்கண்டு, பச்சைப் பயறு, உளுந்துவடை, மோர், வெங்காயம், நெல்லிக்காய், சுரைக்காய், வெந்தயக்கீரை, நாவற்பழம், மாதுளம் பழம், இளநீர், கோவைக்காய் போன்றவை நமது உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவை.

வயிற்று கோளாறுக்கு அருமருந்து என்ன?
 

16. நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லையால் அவதி படுகிறீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் உணவில் சுண்டைக்காயை சேர்த்தால் போதும் இவை அனைத்தும் தூர ஓடிவிடும்.

17. வெங்காயம், சிறுகீரை, பூண்டு, வேப்பிலை, மஞ்சள், மிளகு, சீரகம், வெல்லம், கருப்பட்டி, சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், எலுமிச்சை, அரைக்கீரை போன்றவை உடலில் உள்ள தேவையற்ற நச்சுத்தன்மை நீக்கும் அற்புத உணவுகள்.

18. மூல நோய் தணிய பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால் போதும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய்கள் நம் கிட்ட கூட நெருங்காது.



19. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. அது கண்களுக்கும் மிக நல்லது.

குளிர்சாதன பெட்டியில் உணவு வைப்பது சரியா? 

20.அதிக நாட்கள் உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கினை விளைவிக்கும் என்பது தான் உண்மை.

21. தினசரி நாம் சிறு சிறு துண்டு அண்ணாச்சி பழத்தை தேனில் நன்கு ஊற வைத்து, அந்தத் தேனை தொடர்ந்து இரண்டு வாரம் சாப்பிட்டால் நமது கல்லீரல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஜீரணக் கோளாறை எப்படி தவிர்ப்பது?

22. நாம் சில விருந்துகளில் சுவை அருமையாக இருந்தால் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டு விடுவோம் ஆனால் அதற்கு பின் தான் பிரச்சனை அந்த உணவு செரிப்பதில் பிரச்சனை ஏற்படும். அந்த நேரத்தில் தேன், புதினா, எலுமிச்சைச் சாறு இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

திராட்சை தோளில் இவ்வளவு பலனா:- 

23. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன. அது மட்டும் அல்லாமல் கேன்சர் செல்களைத் தகர்த்து ஏறியும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா ஆம் உண்மை தான். தினசரி சமையலுக்கு காய் வாங்கும் போது லிஸ்டில் திராச்சையும் சேர்த்து வாங்குங்கள். அது உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.   

இவற்றை கடை பிடியுங்கள் இனி மருந்தே வேண்டாம்:-

24. காலையில் நடை பயணம் செய்யும் பலரும் இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்குச் செல்லும் போது கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். இது உங்கள் நுரையீரலுக்கு நல்ல பயனளிக்கும்.

மனதை தைரியப்படுத்தினால் பாதி நோய் குணமாகும்:-

25. எந்தவிதமான நோய் தாக்கியிருந்தாலும் முதலில் நாம் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய முக்கியமான சிகிச்சை ஆகும்.

Comments